Main News
ஜனாதிபதி மைத்திரி தனது நிறைவேற்று, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்
ஷிராந்தி மற்றும் நாமலை கைதுசெய்வதைத் தடுக்கவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கைவிட்டதாக, எஸ்.பி. கூறுவாறாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தன்னிடம் இருந்த கட்சித் தலைமைப் பொறுப்பை “தா” என்று தற்போதைய ஜனாதிபதி கோரியதாக, மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நீர்கொழும்பில் வைத்து குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று (15) இடம்பெற்ற…
விமானப்படை வரலாறு தொடர்பான ஆங்கில இதழ் கையளிப்பு!
“The history of SLAF Diyatalawa and the Regiment” (தியத்தலாவ விமானப்படை வரலாறும் விமானப்படை படைப்பிரிவும்) எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகமொன்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலகவிடம் கையளிக்கப்பட்டது. எயார் வைஸ் மார்ஷல் ஏபி சோஸா (ஓய்வு) மற்றும் விங் கொமாண்டர் எஸ்ஆர் ரத்னபால (ஓய்வு) ஆகியோரால் எழுதப்பட்ட இந்த இதழானது அண்மையில் (11) பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டது. மேற்படி புத்தகம் ஜனவரி…
இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை – BBS
நாட்டுக்காகவும், பௌத்த மதத்துக்காகவும் குரல்கொடுத்த ஞானசார தேரரின் கடந்த காலத்தை ஆராய்ந்து கொண்டிருக்காது உலமா சபையின் ஐ.எஸ். அமைப்புடனான தொடர்புகளைத் தேடிப்பார்க்குமாறு உளவுப்பிரிவினருக்கு பொதுபலசேனா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து செயற்பட்டு சிரியாவில் கொல்லப்பட்ட அபூ சிலானி என்பவருக்கும் இலங்கை ஐம்இய்யத்துல் உலமாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதனால் உலமா சபைக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. கொழும்பு, கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு…
சுந்திரக் கட்சி துண்டாடப் படுவதால் நாட்டிற்கே பாதிப்பு
– ஷம்ஸ் பாஹிம் – சுதந்திரக் கட்சியை உடைக்கும் பாவகாரியத்துக்கு ஜ.தே.க ஒருபோதும் துணைபோகாது என களுத்துறை மாவட்ட ஜ.தே.க பிரதி அமைச்சர் அஜித் பி பொரேரா தெரிவித்தார். ஆனால், நாட்டுக்கு எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பரவாயில்லை கட்சியைத் துண்டாடியாவது தமக்கு எதிரான குற்றங்களை மறைக்க ஒரு தரப்பினர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை பகுதியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் சுதந்திரக்கட்சி பிளவு குறித்து கருத்துத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சி துண்டாடப்படுவது ஜனநாயக்திற்கு அச்சுறுத்தலாகும்.ஜனாதபதி…
பொது மக்களுக்கான நடமாடும் சேவை!
167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை இன்று 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந் நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ்…
சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியாவுக்கு 91 குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்கக்காரவை விடவும் அரசாங்கம் சிறப்பாக விளையாடுகிறது – மஹிந்த
மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாக சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை உடற்பயிற்சியில் ஈடுபட மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று அவருடன் கலந்துரையாடிய போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. எனக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்ததில்லை….
ஜனாதிபதி பேர்லினை சென்றடைந்தார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் நேற்று (15) அதிகாலை பேர்லினில் அமைந்திருக்கும் டெகல் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 01 – 02 ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் திரு. ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ் அவர்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்கின்றார். 03 – 06 ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில்…
வெல்கமவுக்கு பிணை
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 24ம்; திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவருக்கு ரூபா 3.2 மில்லியனை, சட்ட விதிமுறைக்குட்படாத வகையில் வழங்கியமை தொடர்பில் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம்…
ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய (15) தினம் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பிக்குமாறும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த இருப்பதாலேயே இங்கு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று…
மீளவும் விண்ணப்பங்கள் கோரும் சுதந்திரக் கட்சி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…
புத்துயிர் பெறுகிறது லசந்த படுகொலை விசாரணை!
சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பொலிஸார் மேலும் சிலரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருப்பதாகத் தெரியவருகின்றது. லசந்தவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புலனாய்வுப் பொலிஸ் குழு நுவரெலியா மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் ஒருவர் உட்பட பத்துப் பேரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிச்சை ஜேசுதாசன் என்பவர் மரணமடைந்ததையடுத்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரின் கிராம…
