Headlines

மின்சார நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு – ஜனாதிபதி உத்தரவு




நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார தடைக்கு நாசகார செயல்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தவேளையில் ஜனாதிபதி இந்த திடீர் உத்தரவை பிறப்பித்தள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மின்சார தடை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்தள்ளார்.

மின்சார தடை தொடர்பில் பல பக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

21 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட பாரிய மின்சாரத் தடை இதுவென்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *