Main News
மீண்டும் மின்தடை.!
நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழ் அகதி
தமிழகத்தின் சேலம் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சேலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார் என்பவரே இவ்வாறு தனது கழுத்தை அறுத்துக் கொண்துள்ளார். இவர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம். நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்ஸில் வந்த இவர், புது…
ஆண் சிசுவின் சடலம் மீட்பு.!
கண்டி, அம்பிட்டிய வீதியின் காண் ஒன்றில் இருந்து ஆண் சிசுவின் சடலத்தை இன்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கண்டிப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது
அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை, பிழையாக வழிநடத்துக்கின்றனர். அரச வங்கிகள் ஒரு போதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது அதனை பாதுகாப்பதற்கான அனைத்தையும் அரசு முன்னெடுக்கும்….
அனுமதி கிடைக்காத டாக்டர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்படும்
பாடசாலை அனுமதி கிடைக்காமல் உள்ள டாக்டர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதிப்படுத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய சங்கத்தினர் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே இந்த உறுதிமொழி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதென சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் நளின்த ஹேரத் மேலும் தெரிவித்திருப்பதாவது, இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை முடித்துக் கொண்டு…
பயாகலைப் பகுதியில் நடந்த சம்பவம் : மக்களே எச்சரிக்கை.!
பயாகலை முதல் மக்கொனை வரையான கடல் எல்லையில் கடல் அலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் இப்பகுதியில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பயாகலைப் பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர். கடந்த 22 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பகுதி கடலில் நீராடிய இரு இளைஞர்கள் மக்கொனை, பயாகலைப் பகுதிகளில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். தென்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் கடலில் நீராடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர்.
ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிரணியினர் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை கையளித்தனர்.
ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
காணி, சுற்றுலாவளத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மைத்திரி சிங்கள மக்களை கவனிப்பதில்லை.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தமிழ் உறவினர்களை பார்க்க மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்லாட்சி அரசாங்கத்தின் கவனிப்பும் அமோகமாகவுள்ளது. ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்கறை கொள்ளாதிருக்கின்றாரென பொது பல சேனா அமை ப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்….
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின. முடிவுகளை பார்வையிட : www.donets.lk
மார்ச் 23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!
2016 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எதிர்வரும் முதல் 23ஆம் திகதி மாலை 3.09 மணி முதல் 7.24 வரை தோன்றுமென கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சன்தன ஜயரட்ண தெரிவிக்கின்றார். இந்த சந்திர கிரகணம் கிழக்கு வானில் தெரியும். இது நிழல் சந்திர கிரகணம் என்பதால் சந்திரனின் ஒளிமங்கலாகத்தெரியும். இவ்வருடத்தில் மற்றுமொரு சத்திர கிரகணம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி நள்ளிரவு நிகழுமெனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
மின்சாரம் தாக்கி 94 பேர் உயிரிழப்பு
மின்சாரத்தின் தாக்கம் காரணமாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூட்டுத்தாபன தொடர்பாடல் பிரி வின் பிரதிப் பணிப்பாளர் வி.விமலாதித்தன் தெரிவித்தார்.
