Main News
உயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு!
தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி…
“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!
நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியதாவது, “ஜனாதிபதி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி, பாராளுமன்றத்தை கலைத்த போது, நீதிமன்றமே எம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வைத்து, அங்கே செல்லக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. நீதித்துறையானது இலங்கையில் சுயாதீனமாகவும், நேர்மையாகவும்…
“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொலிஸ் அதிகாரியுமான (ஐ.பி) மருதமுனை ரஹ்மானின் திடீர் மறைவு, தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் தெரிவித்ததாவது, மர்ஹும் ரஹ்மான் பொலிஸ் சேவையில் பணியாற்றிய காலங்கள் அவரின் தொழிற்திறமை, சமூக விசுவாசங்களை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது. யுத்த காலத்தில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னுடன் பயணித்த பொலிஸ் குழாத்தினரைப் பாதுகாப்பாக மீட்டெடுக்க ரஹ்மான் கையாண்ட யுக்திகளை…
“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்” – அலரி மாளிகை ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, அரசமைப்பில் இல்லாத அதிகாரத்தை…
“அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓட்டைக்கு துணை போனோல் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்” – பாணந்துறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
நிறைவேற்று அதிகாரத்துக்கு கடிவாளம் இடப்படாத காலத்திலிருந்த ஜனாதிபதிகளான ஜெயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, டி பி விஜயதுங்க ஆகியோர் அரசியலமைப்புக்கு இயைந்து செயற்பட்ட நிலையில் 19வது திருத்தத்தின் மூலம் சிறகுகள் கத்தரிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை கையிலெடுத்துக் கொண்டு தனது சுய விருப்புக்கேற்ப செயற்பட்டு, மீயுயர் சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாரூக் பஸ்மில்கான் எழுதிய க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான ”அரசறிவியல் ஓர் அறிமுகம்”…
”நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவுக்கு பின்னராவது, ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்து!
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று (12) தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!
நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை இரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றியபோதே , இந்த வேண்டுகோளை அமைச்சர் விடுத்துள்ளார். அவர் மேலும்…
“ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை மீண்டும் செயற்படுத்துங்கள்” ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!
நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று (29) பாராளுமன்றில் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற செயற்பாடுகள் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்ற…
நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் 19!
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன், எம்.பிக்களைப் பெறக் கூடிய வேறு கட்சிகளுடன் அரசியல் செய்வது குறித்தும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திப்பதே 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை பொருத்தமானது. காலமாற்றத்துக்குள்…
அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்!
(அகில இலங்கை மக்கள் கான்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் 46வது பிறந்ததினத்தையொட்டி வெளியிடப்பட்டும் கட்டுரை 27.11.2018) இலங்கையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் நெருக்கடி காரணமாக நாடும் அரச இயந்திரங்களும் முடங்கிக் கிடக்கின்றது. பிரதமர் பதவி நீக்கத்தில் ஆரம்பித்து பாராளுமன்ற ஒத்திவைப்பு, திடீரெனக் கலைப்பு மற்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ள விவகாரங்களால் இலங்கை அரசியலில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் இதன் தாக்கம் விரவி, அன்றாட நிர்வாகம் சீர்குலைந்து, பொருளாதார நீதியிலும் பல்வேறு பின்னடைவுகளை சந்திக்க வேண்டி நேரிட்டுள்ளது….
பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்; காலத்தை இழுத்தடிப்பதில் அர்த்தமில்லையென ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்து!!
அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (27) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தில் சபாநாயகர் செயற்படும் முறை, அவரது தைரியம் துணிவு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் பாங்கு ஆகியவை…
கண்டி, ஹிஜிராகமை மையவாடி பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதிக்கீட்டில், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீனின் வேண்டுகோளுக்கு அமைய, உடபலாத பிரதேச சபை வேட்பாளர் முகம்மட் ரமலானின் கோரிக்கைக்கு இணங்க, கண்டி, தெல்பிடிய ஹிஜிராகமை மையவாடிக்கு செல்லும் பாதையை செப்பனிட்டு கொண்ங்கிரீட் செய்யும் பணிகள் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உடபலாத பிரதேச சபை…
