Main News
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லங்கா சதொச மூலம் விநியோகம்! அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!
வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக பெய்துவந்த மழையினால் வடக்கில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இம்மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம் காணப்படுவதாகவும், இதனை கட்டுப்பாடும்,…
விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!
விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று (26) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆராச்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான குழுவினர் விஜயம்!
தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், உயர்மட்டக் குழுவினர் அங்கு விசேட உலங்கு வானூர்த்தியில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினையடுத்து வடக்கில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானதையடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பிட்ட மாவட்டங்களில் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புக் கொண்ட அமைச்சர், கடும் மழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வகையில் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே வேளை இந்தப் பிரதேசங்களின் நிலைமை குறித்து…
மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் “கிராம சக்தி” நிகழ்ச்சித் திட்டம்!
“கிராம சக்தி” எனும் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(21) மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிலங்குளம், பறப்பான் கண்டலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் மக்களின் அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. தவிசாளர் முஜாஹிர் இங்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அரசியல் கலாச்சாரம் சீரழிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்திலும் எமது அமைச்சர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பல இடர்களுக்கும் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும்…
பாரளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இராஜாங்க அமைச்சராக நியமனம்!
விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று மாலை (21) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பதவியேற்பு!
கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (20) ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்தார். பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரசியல் சித்து விளையாட்டில், மாமனை வீழ்த்திய மருமகன்!
நிறைவேற்று அதிகாரத்தின் தொடுவாயிலிருந்து சில சந்தர்ப்பங்களை மீட்டிப்பார்க்கும் நிர்ப்பந்தங்களை இரண்டு மாத அரசியல் இழுபறி எனக்குள் ஏற்படுத்திற்று. இதனால் ஒப்பீட்டு ஆய்வுக்குள் நான் திணிக்கப்பட்டுள்ளேன். 1978 பெப்ரவரி 04 இல் நடைமுறைக்கு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யாரைப் பாதுகாக்கும்? எவரைப் பாதுகாத்தது? ஏன் தேவைப்பட்டது? சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வியாக்கியானம் வழங்கும் சட்டாம்பிள்ளைகளுக்கு சத்திய வாக்காகப் பதிலுரைக்க இதற்குத் தெளிவு தேவை. ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகளும் நிறைவேற்று அதிகாரத்தின் நிஜம் என்ன, நிழல்…
சர் ஜோன் கொத்தலவல மாவத்தை வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அஷார்தீன் மொய்னுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சமூக சேவையாளர் கனீ பாயின் வேண்டுக்கோளுக்கிணங்க, குருநாகல், சர் ஜோன் கொத்தலாவல வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாநகர சபை உறுப்பினர் அஷார்தீன் இந்தப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், புனரமைப்பு வேலைகளை துரிதகதியில் பூர்த்தி செய்து, விரைவில் மக்கள் பாவனைக்காக வீதியை கையளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். (ன)
“ஜனநாயக வழிப் போராட்டமே எமக்கு கிடைத்த பாரிய வெற்றி” – அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
நாட்டின் அரசியல் நிலை சீர்குலைவுக்கு எமது ஜனநாயக ரீதியான போராட்டமே எமது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீதித் துறை நீதியை நிலை நாட்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே (17), அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஐந்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை கட்சிகள் 60…
நிந்தவூர் பிரதேச சபையின் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேறியது!
நிந்தவூர் பிரதேச சபையின் 9ஆவது கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது இக்கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் அவர்களால் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் சமூகமளித்திருக்கவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் சபையின் உப.தவிசாளருமான வை.எல். சுலைமான் லெப்பை அவர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பேசும்போது தவிசாளரால் முன்வைக்கப்பட்டுள்ள…
நிந்தவூர் பாடசாலை சமூகத்துடனான சந்திப்பு!!!
நிந்தவூரிலுள்ள பாடசாலைச் சமூகத்திற்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(14) நிந்தவூரிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறும், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது தவிசாளர், நிந்தவூரை பொருத்தமட்டில் கடல், வயல் சார்ந்த தொழில் துறைகளுக்கு அப்பால் கல்வி என்பது பாரிய…
