Headlines

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் (வாழவைத்த குளம், ஆண்டியாபுளியங்குளம், புதுக்குளம்) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தையல் பயற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள், அமைப்பாளர் தாவூத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More

பேசாலை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  7,100,000.00 ரூபாய் நிதியொதுக்கீட்டில்  பேசாலை வீதிக்கு காபட் இடும் பணிகள், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்  எஸ்.எச்.எம்.முஜாஹிரினால் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசாலை பிரதேச சபை உறுப்பினர் டிப்னா குரூஸ், பிரதேச சபை உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஐயா, வெற்றிமாதா பங்குதந்தை அவர்களும்,மன்னார் பொலிஸ் அதிகாரி (OIC),  பிரதேச சபை உறுப்பினர் றாசிக், இணைப்பளர் முசம்மில் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Read More

”ருத்ர தாண்டவமாடும் நிறைவேற்றதிகாரம்” மொண்டஸ்கியுவின் வலுவேறாக்கற் கோட்பாடு வலுப்படுத்துமா?

நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இப்போது வீணடிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதியுச்ச அதிகாரத்தை நாடு அன்றிருந்த சூழ்நிலையைக் கருதியே ஜே.ஆர் ஜெயவர்தன அறிமுகப்படுத்தினார். அவசரமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு பாராளுமன்றத்தைக் கூட்டி ஆலோசனை கோரல், வாக்கெடுப்பு நடத்துதலில் காலதாமதம் ஏற்படுதல் என்பவற்றைக் கருத்திற் கொண்டே தனி நபருக்கான இவ்வுச்ச அதிகாரம் அறிமுகமானது. நாடு எதிர்கொள்ள நேரிடும் ஆபத்தான நிலைகள், சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படும்…

Read More

சம்மாந்துறையில் வளத்தாப்பிட்டி,மஜீட்புரம் வீதிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம், மிஹ்ராஜ் வீதி கொங்கிரீட் இடப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை, மல்வத்தை 03,மஜீட்புரம் பூனப்பால்லர் வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பியர் கிராமத்திற்கும் கடற்கரைக்குமான பாதை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, தலைமன்னார் பியர் கிராமத்திற்கும், கடற்கரைக்குமான பாதையினை கொங்கிறீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (21) பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பாதையானது மழை காலங்களில் நீர் நிறைந்து சேறும் சகதியாகவும் காணப்படுவதனால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதுடன், வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்ற வியாபாரிகளும் பெரும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”!

65 ஆவது வேலைத்திட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூபின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெள்ளைமணல், தி/அல் அஷ்ஹர் மகா வித்தியாலயத்தில் பிரதான நுழைவாயில் நிர்மாணப் பணிகள் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் மௌலவி ஹதியாத்துல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், திருக்கோணமலை வலய கோட்ட கல்வி பணிப்பாளர் திரு அரியநாயகம்…

Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவியின் நிதிஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் DCB நிதி ஒதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்கு கிளை மற்றும் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் வேண்டியதற்கமைய *180,000 ரூபா செலவில் புத்தளம் சவீவபுரம் உள்ளக ஒழுங்கைகளை ABC கற்களால் செப்பனிடலும், *250, 000 ரூபா செலவில் செய்னப் பாடசாலைக்கான சுற்று மதில் நிர்மானமும் (பகுதி நிதி பாடசாலை அபிவிருத்தி சபையும் அயலோரும்), *80,000 ரூபா பெறுமதியில் புத்தளம் கிழக்கு சி.த.மு…

Read More

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை” – மஹ்ரூப் எம்.பி திட்டவட்டம்!

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி, எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து…

Read More

சமகால அரசியல் நிலவரம் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு!

இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (17) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார். மேலும், திடீர் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நாள்முதல், இன்றுவரை நாட்டில் அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு செல்கின்றது,…

Read More

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் செவிசாய்க்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டில் (14) கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்புக்கள், குளறுபடிகள் நீங்கி, மீண்டும் இந்த நாட்டில் அமைதியானதும், சமாதானதுமான சூழல் ஏற்படுவதற்கு ஜனாதிபதி வழிவகுக்க…

Read More

“ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!!!

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட விரும்பும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும், இன்றைய (13) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமானதாக அமைய வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதி, தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் எழுந்தமானமாக கையில் எடுத்துக்கொண்டு, மனம்போன போக்கிலே செயலாற்றி வருவதை எதிர்த்து, அந்த நடவடிக்கைகளுக்கு நியாயம் கோரியே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் ஏனைய கட்சிகளைப் போன்று, அகில…

Read More

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!!

நாட்டின் அரசியலமைப்பை மீறி, பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து, சட்டத்துக்கு முரணான முறையில்,…

Read More