Main News
சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழா!
சம்மாந்துறை பிரதேச சபைகுட்பட்ட நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில், தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான…
நிந்தவூர் தமிழ்ச் சகோதரர்களின் மயான பூமியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிரினால் முன்னெடுக்கப்படும், நிந்தவூரின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக, 20 இலட்சம் ரூபா செலவில், தமிழ் சகோதரர்களின் மயான பூமியின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் நீர், மின் இணைப்பு போன்ற வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் (01) குறித்த மயான பூமியில் இடம்பெற்றது. தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்வூரின் தமிழ் பகுதி…
திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளுக்கான காசோலை வழங்கி வைப்பு!
பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், திவுரும்பொல, மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் வரவேற்பு மண்டப வேலைகள் நடைபெற்று வருகின்றன. கட்டிட வேலைகளுக்கான காசோலையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் அண்மையில் வழங்கிவைத்தார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் அதிபர்…
கஹட்டகஸ்திகிலிய பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 100 நாளில் 110 விசேட வேலைத்திட்டம் மற்றும் 100 நாளில் 115 அதிரடி வேலைத்திட்டம் என இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காய் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் 225 வேலைத்திட்டங்களில் ஒன்றாக, கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் 2018.10.23 பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது. (ன)
அமைச்சர் ரிஷாட் மீது அபாண்டமான பரப்புரைகள்! – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்!
அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களில் 800 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்சொன்னவாறு கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர் நடந்து கொண்டிருந்தால் அது ஒரு ‘சமூகத் துரோகம்’, ‘காட்டிக் கொடுப்பு ‘என்ற எனது ஸ்திரமான நிலைப்பாட்டுடன் குறித் அமைச்சரவை அமர்வில் கலந்து கொண்ட பல அமைச்சர்களை நான் தொலைபேசியில் தொடர்பு…
“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இனம், மதம் கடந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று”-ரிப்கான் பதியுதீன்!
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா மாவட்டத்தில் உள்ள பல சிங்கள கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களை, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கூறியதாவது, இந்த நிகழ்வானது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளின் உண்மை நிலையை இலங்கை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டக்கூடியதாக…
அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்ய சதி; அவரை வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஸீர்!
அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி சர்வதேச நாடுகளில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் அவரை உங்கள் வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கு மிகப்பெரியது. அவருக்கு உயிர் அச்சுறுத்தல்களும்…
பல வருடங்களாக போக்குவரத்துக்கு தடையாகயிருந்த பாதை பி.உ.சஹீலின் முயற்சியால் புதுப்பொலிவு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஓதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீலின் முயற்சியினால், பல வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட, உடங்கா 01, அம்பாறை 12 ஆம் வீதியின், குறுக்கு வீதியின் புனரமைப்பு மற்றும் பாலத்திற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல வருட காலமாக எந்தவித போக்குவரத்தும் இடம்பெறாது, இருள் சூழ்ந்திருந்த இப்பாதையானது, பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் முயற்சியினால் திருத்தம் செய்யப்படுவதனையிட்டு…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு!
புத்தளம் மாவட்டத்தின் கொட்ராமுல்லை, தில்லையடி, புத்தள நகர், பாலாவி, காரைத்தீவு, புளிச்சாக்குலம், மாதம்பை ஆகிய பகுதிகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புணரமைப்பு மற்றும் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரியின் தலைமையில் இடம் பெற்றது. புத்தள மாவட்டத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவினை அமைக்கும் வகையில், புத்தளம் தொகுதியின் அனைத்து வட்டாரங்களுக்குமான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில்…
திட்ட அமுலாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்!
கிண்ணியா பிரதேச சபையின் முனைச்சேனை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் 100 நாள் 200 வேலைத்திட்டத்தில், 30 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (24) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினரும், முனைச்சேனை வட்டார அமைப்பாளருமான அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்…
“அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடனேயே முசலியில் வீடுகள் வழங்கப்படுகின்றன” முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப் தெரிவிப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முசலியில் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டமானது, அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடனே வழங்கப்படுகின்றன என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் தெரிவித்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 7௦௦ வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார், முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, ‘’முசலியிலே நடைபெறுகின்ற இந்த வைபவத்தினை ஒரு…
காணி தொடர்பான ஆவணங்கள் திரட்டல்!
கிழக்கு மாகாணத்தில் தீர்த்து வைக்கப்படாத காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து திரட்டப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் எஸ். சுபைர்டீன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத காணிப் பிரச்சினை தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் காணியமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய, விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய…
