Main News
ஊடகவியலாளரின் தந்தை காலமானார்
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 60 ஆவது வயதில் காலமானார். இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பிள்ளையான் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்தார். இந்நிலையிலே் அவரை…
பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!
எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அத்துடன் வெ ளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்காககுறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார். சபுகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற ‘இலங்கையில் தற்போதைய பொருளாதார நிலைமை’ தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த…
சிறுவனை பணையக் கைதியாக வைத்து கொள்ளை!
17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆயுத குழுவினர், தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதோடு வீட்டில் இருந்த 17 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொச்சிக்கடை பகுதியில் விடுவித்துள்ளர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத அதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சபாநாயகர் பாக்கிஸ்தான் பயணம்
சபாநாயகர் கரு ஜயசூரிய பௌத்த பிக்குகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றுடன் பாக்கிஸ்தானுக்கு ஒருவார சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தக் குழுவில் முக்கிய விகாரைகளின் அதிபதிகள் மற்றும் பௌத்த புத்திஜீவிகளை கொண்ட 40 பேர் உள்ளடங்கியுள்ளனர். கோட்டே ஸ்ரீகல்யாணி தர்ம சபையின் பிரதம சங்க நாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் திருகோணமலை ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின்…
அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாணசபை அமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்கவுள்ளார். மேலும், இந்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக அனைத்து மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படவுள்ளதோடு, மேதினத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கை வரும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வொல்ட்ஸ்ரோம் யாழ். குடாநாட்டிற்கும் செல்லவுள்ளார்.சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து சுவிஸ் அமைச்சர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மறவன்புலோவில் சுவிஸ் நாட்டின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடுவதற்காக சுவிஸ் அமைச்சர் எதிர்வரும் 26ஆம் திகதி…
அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஒருநாள் வேலைத்திட்டம்!
உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய வேலைத்திட்டங்களை சவாலாகக் கொண்டு ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் நாளை காலை 8 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் பிரதி செயலாளர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் உள்ளிட்டோர்…
கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!
கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்குவதாகவும் மற்றும் சீன நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும், கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படும் காணிகளுக்கு சந்தை பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
‘தேஜாஸ்’ மீது இலங்கை கவனம்
இந்திய தயாரிப்பான ‘தேஜாஸ்’ என்ற இலகுரக போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாகிஸ்தான் உற்பத்தியான JF-17 ரக போர் விமானத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை முன்னர் அவதானம் செலுத்திய போதும் பின்னர், அது கைவிடப்பட்டு, தற்போது இலங்கையின் கவனம் தேஜாஸ் மீது திரும்பியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இதேவேளை, தேஜாஸ் விமானம் தொடர்பில் பல நாடுகளும் தற்போது அவதானம் செலுத்திவருவதாகவும் இந்திய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல்: இலங்கையர்கள் எண்மர் அடையாளம்
பங்களாதேஸின் மத்திய வங்கியின் ஊடாக சைபர் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 20 வெளிநாட்டவர்கள் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் 8 பேர் இலங்கையர்கள் எனவும் 12 பேர் பிலிப்பினியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
