Main News
பல்கலை புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்
பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இம்முறை வழங்கப்படவுள்ள கையேடானது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான விடயங்கள் நாளை முதல் பத்திரிகைகள் ஊடாக விளப்பரப்படுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு…
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு 21 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணமாகவிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவீனங்களை குறைப்பதற்காக சர்வதேச நாடுகளுக்கான விஜயங்களை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி…
மஹிந்தவை மத்திய குழு கட்டுப்படுத்த முடியாது.!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்கள் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனினும் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார். எனவே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்துவது போன்று அவரை வழிநடத்த முடியாது. அவரை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவரது விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரத்தியேகமான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) காலை…
பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை.!
இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். என்.கே. இலங்கக்கோன் கடந்த 12 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தரவின் பெயரினை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.
பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்
பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். வரி சலுகையை பெற்றுக் கொள்வதில்…
முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு
– அஸ்லம் எஸ்.மௌலானா – இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளனர். இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி…
ஜப்பான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்!
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய பேரரசர் ஆக்கிஹிட்டோவிற்கு (Emperor Akihito) அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானிய மக்கள் நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பேரிடர்களை கடந்து முன்னேற வேண்டும் எனவும், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அரசு என்ற ரீதியில் தாமும் இலங்கை மக்களும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிலநடுக்கத்தினால் ஜப்பானிலுள்ள இலங்கை…
ஹிருணிகா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இனந்தெரியாத நபர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகாவின் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கின் முன்னேற்றமான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கிற்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த…
ஜனாதிபதியின் 7G பயணம் நாட்டிற்கு வரப்பிரசாதமே – மஹிந்த சமரசிங்க
ஜனாதிபதியின் 7G பயணமானது நாட்டிற்கு பெறும் வரப்பிரசாதமென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் குறித்த மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் நாடு, கடந்து வந்த பாதை மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது அங்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும்,பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை இதன்போது எதிர்பார்க்கலாம் என இவர் சுட்டிக்காட்டினார்….
வெட் வரி ஒரு ரூபா கூட அதிகரிக்கப்பட மாட்டாது
எக்காரணத்திற்கொண்டும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்ட வெட் வரி, மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வெட் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வெட் வரியை ஒரு ரூபா கூட அதிகரிக்க விடமாட்டேன்…
சு.க எம்.பி.க்கள் தனித்துப் பேச்சு
தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இவ்வாரத்தில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிரணியின் கொள்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடைமுறை நடைமுறைச் செயற்றிட்டங்கள் தொடர்பில், இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என்று சு.க.வின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாங்கள் தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்தப்போவதாக, கூட்டு எதிரணியினர் கடந்த…
நெல் கொள்வனவு மீண்டும் ஆரம்பம்
நெல் கொள்வனவானது இன்று (18) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் கொள்வனவானது மீண்டும் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஒரு இலட்சத்து 25ஆயிரம் மெட்றிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்ய எதிர் பார்த்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
