Headlines

ஏழு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஐந்து புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயரிஸ்தானிகர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(22) கையளித்தனர். இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அவ்வகையில் திரு. கார்லோஸ் ஈ ஓர்லாண்டோ (Carlos E. Orlando) உருகுவே குடியரசின் தூதுவர் திரு. பிரகாத் எச். டேர்ட்லி (Parakhat H. Durdyev) துருக்மெனிக்ஸ்தான் குடியரசின் தூதுவர் திரு. குயுலோ பெத்ஓ (Gyula PethO) ஹங்கேரி நாட்டின் தூதுவர் திரு. சொசெப் டுரொபெனிக் (Zozef Drofenik) சுலோவேனியா குடியரசின் தூதுவர் திரு. நியான்கொரோ…

Read More

சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர் நியமிப்பு

கோட்டை தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக ஆர்.ஏ.டி ஜனக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனக ரணவக்க தனது நியமனக் கடிதத்தினை நேற்று (22) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Read More

மஹிந்தவின் பெயரிலும் வீட்டுத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் பெயரிலும் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Read More

மஹிந்த நாட்டைவிட்டு வெளியேறியமைக்கான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற வாசகம்

இலங்கையின் முன்னணி பாதணி உற்பத்தி நிறுவணமான டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவணத்தின் ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற அறபு எழுத்தை ஒத்த வடிவமைப்புக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பாதணிகள் சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளதினால் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். புதுவருடப் புத்தாண்டுக்காக செய்யப்பட்ட இப்பாதணிகளிலேயே இவ்வாறான அறபு வடிவமைப்புக்கள் காணப்பட்டுள்ளன. இப்பாதணிகள் தொடர்பில் டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவனத்திடம் முஸ்லிம்கள் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பில் தற்போது குறித்த நிறுவணம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி…

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம்!

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொது உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் இவ் விண்ணப்ப படிவ கையேட்டினைப் பெற்று விண்ணப்பிக்க முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்ப கையேட்டில் தேவையான தகவல்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்….

Read More

தாஜு­தீனின் படு­கொலை : மூன்று முக்கிய நபர்கள் கைதாவர்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை விவ­கா­ரத்தில் மேலும் முக்கிய மூன்று நபர்கள் கைது செய்யப்படுவர் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று ( இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

Read More

மஹிந்தவின் அலுவலகத்திற்கருகில் ஒருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்திற்கருகில் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

FCID இல்லாதொழிக்கப்படாது –

நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (22) தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.

Read More

இம்முறை எவருக்கும், எந்த மன்னிப்பும் கிடையாது

காலி, சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சியில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திசாநாயக்க, ‘இதற்கு முன்னரும், கட்சிக்கு…

Read More

பொதுபல சேனாவின் நடவடிக்கையால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதா?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஹோமாகம நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நீதவான், சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்…

Read More

மைத்திரி நூல் எழுதுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் பற்றிய நூல் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் அவர்கள் செய்தவை பற்றி இப்போது தன்னால் பேச முடியும் என்றும், இந்த விடயம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களை எழுத முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி தனக்குத் தரப்படவில்லை…

Read More