Headlines

34 ஆவது பொலிஸ் மா அதிபர் இன்று நேர்முகப் பரீட்சை

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும் தகைமைகளை பரீட்சித்துப் பார்க்க அரசியலமைப்புசபை தீர்மானித்துள்ளது. அதன்படிசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜயசுந்தர,சந்தன விக்ரமரத்ன ஆகியோர் இன்று (18) பாராளுமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அரசியலமைப்பு சபை பாராளுமன்றில் கூடவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்யும் பணி இடம்பெறவுள்ளது. இந் நிலையிலேயே பதில் பொலிஸ்…

Read More

ஒத்­து­ழைப்பு வழங்க மஹிந்த இணக்கம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளனர். கடந்த வாரம் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக ஆங்­கில ஊடகம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விற்கும் இடையில் பிர­த­மரின் சீன விஜ­யத்­திற்கு முன்னர் நடை­பெற்ற சந்­திப்­பினைத் தொடர்ந்து இந்த சந்­திப்பு நடத்­தப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­திக்கும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான சந்­திப்பின் போது சில இணக்­கப்­பா­டுகள் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது அர­சியல் விவ­கா­ரங்­களில் ஒத்­து­ழைப்பு…

Read More

எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்ற கடந்த சில தினங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகமான எரிபொருள் கேள்வி நிலவியதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் இருந்தமையை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒபாமாவை சந்திப்பார் மைத்திரி

ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில்  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ௪ப்பானின் ஷிமா நகரில், மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில், ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி…

Read More

அமெரிக்கா கடற்படையுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி

இலங்கை கடற்படையினரும் அமெரிக்கா கடற்படையினரும் இணைந்து கூட்டு பயிற்சியிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப் கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படையில் 20 பேர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் போது இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை நீக்குவது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கைக்கு பங்களாதேஷ் எதிர்ப்பு

இலங்கை பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்த விடுத்த கோரிக்கைக்கு  பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விஸ்தரிப்பதற்காக அனுமதி கோரியிருந்த நிலமையில்  அக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை விடுத்திருந்த கோரிக்கையில் பங்களாதேஷின் கடற்பரப்பின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும்  இவ்வாறு கடற்பரப்பினை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என பங்காளதேஸ் அறிவித்துள்ளது. தமது கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை…

Read More

ஐந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஐந்து இலங்கையர்களை சேர்பியாவுக்கு ரொமானியாவிலிருந்து கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ரொமானிய குடிவரவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ரொமானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றமையால் குறித்த ஐந்து இலங்கையர்களும் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் 20 முதல் 24 வயதுகளை உடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் திடீர் சோதனை

யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமானம் நேற்­று­முன்­தினம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டு சற்று நேரத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரிகள் வழங்­கிய பாது­காப்பு தொடர்­பான எச்­ச­ரிக்கை அறி­விப்பை அடுத்தே விமானம் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமானம் தரை­யி­றக்­கப்­பட்ட பின்னர்இ சில பய­ணி­க­ளிடம் சிங்­கப்பூர் பொலி­ஸாரும்இ விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரி­களும் விரி­வான விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர். இவர்­களில் 5 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம் கூறி­யுள்­ளது….

Read More

பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு

மாத்தளை – லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல – வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

Read More

ஜனா­தி­பதி– வடக்கு முதல்வர் திங்களில் சந்­திப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கினேஸ்­வ­ர­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு எதிர்­வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது.

Read More

நேபாளம்- இலங்கை நேரடி விமானச்சேவை ஆரம்பம்

நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த 12ம் திகதி முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிமாலயய விமான சேவை நிறுவனமானது சாதாரண வகுப்பு விமான டிக்கட்டுக்கு 35,000 இல் இருந்து 55,000 வரை கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

Read More

சுஜாதா, டீர் மற்றும் வருண கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 3 கப்பல்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, டீர் மற்றும் இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண ஆகிய 3 கப்பல்களு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு…

Read More