Main News
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் : ஜனாதிபதி
இம்முறை நடைப்பெறவிருக்கும் மே தின ஊர்வலங்களுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது தொடர்பில் தமக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும், காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணியில் கலந்து கொள்பவர்களை…
புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு
ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது. புதிய பொருளாதார வலயம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், உலகத்தில் இரண்டாவது பாரிய சந்தைக்குள் இலங்கைக்கு நுழைய முடியுமென அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம…
வாகனங்களின் விலையில் ஏற்படும் பாரிய மாற்றங்கள்.!
வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரிய மாற்றங்கள் ஏற்படும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம் எனவும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதரா நிலைமையினால் வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர், மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைய அமைச்சரவை அங்கீகாரம்!
ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்தில் மற்றுமொரு விமான நிலையம்
ஊவா மாகாணத்தில் எளிமையான விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (25) பதுளை மாவட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளை நகரத்திற்கு அருகில் மகாஉல்பத்த மற்றும் தென் கெபில்லவெல கிராம சேவகர் பிரிவிற்கான மகாஉல்பத்த – நாயபெத்தவத்தை வரையிலான இடமொன்றிலே இந்த நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஹப்புத்தளை தொடலாகலவத்தை…
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் வாசுதேவ பங்கேற்க மாட்டார்!
கூட்டு எதிர்க்கட்சியினால் கிருலப்பயில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பங்கேற்க மாட்டார். கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது அதனை தந்திரமாக தவிர்க்க சில கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இவ்வாறு மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது தந்திரமாக அதனை தவிர்க்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, வாசுதேவ நாணயக்கார ஏற்கனவே கியூபா நோக்கிப்…
தாஜூதீன் கொலை: அரச சாட்சியாளராக முன்னாள் பொலிஸ் அதிகாரி
முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையில் அரச சாட்சியாளராக மாற இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இணக்கம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, விசாரணை அதிகாரிகளிடம் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இன்னும் பொலிஸ் தரப்பு தமது முடிவை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ்…
மின்சார சபையின் யோசனையை பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரிப்பு
55 மெகாவோட்ஸ் அளவு சக்திவளத்தை கொள்முதல் செய்ய இலங்கை மின்சாரசபை முன்வைத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை கருத்திற்கொண்டு இந்த 55 மெகாவோட்ஸ் மின்சார கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத்தருமாறு மின்சாரசபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இது நடைமுறைகளை மீறும் செயல் என்று பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள்!
இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள் அமைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அழகியல்கலைப் பீடம் மற்றும் சுதேச வைத்தியத்துறை பீடங்களுக்கான இரண்டு புதிய விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்த அமைச்சர் றிஷாத்!
யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (25) மாலை சந்தித்து நலன் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். இதன்போது திடீர் சுகவீனமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண முதலமைச்சரின் உடல் நலன் குறித்து றிஷாத் பதியுதீன் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.
திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் இனி இல்லை
எதிர்வரும் காலத்தில் நகர்புற குடியிருப்புக்கள் மற்றும் கிராம புற குடியிருப்புக்கள் உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரச திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தீர்மானித்துள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகளினால் மட்டுமே நகர மற்றும் கிராமிய குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குடியிருப்புக்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டும் நிலங்கள் அரசின் மூலம் வழங்கப்படுவதுடன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் முதலீட்டாளர்கள் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்தானித்துள்ளது. இப்புதிய திட்டத்தின் மூலம் கொழும்பில்…
சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கவில்லை
எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கடந்த ஏப்ரல் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாமொன்றுக்கு அத்துமீறி செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
