Headlines

FCID இல்லாதொழிக்கப்படாது –




நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (22) தெரிவித்தார்.

புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *