Main News
மீள்குடியேற்ற அதிகாரம் றிஷாட் பதியுதீனிடம் மீளக்கிடைத்தது!!!
கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் வடபுல முஸ்லிம்கள் சுதந்திரமாக சென்று மீள்குடியேறக் கூடிய சூழல் நிலவவில்லை. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பூர்வீகக் கிராமங்கள் விடுவிக்கப்பட்டு இருக்கவில்லை.ஆனால் வன்னி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கி இருந்த 300 000 குடும்பங்களை இவரால் குடியேற்ற முடிந்தது. நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தும் என்னால் வடபுல முஸ்லிம்களை கௌரவமாக மீள்குடியேற்ற முடியவில்லையே என்ற கவலை இவரை வெகுவாக வாட்டியது.இவரின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சர்களாக இருந்தோர்…
துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் ஊழியர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.
இலங்கையில் காணப்படும் துறைமுகங்கள் தெடர்சியான அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்படும் துறைமுகங்களில் காணப்படும் ஊழியர்களின் பிரச்சினைகள் உற்பட பல குறைகள் தீர்க்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளனர். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து உறையாற்றுகையில் அம்பாந்தோட்டை கொழும்பு காலி திருகோணமலை போன்ற மாவட்டங்களில் துறைமுகங்கள் காணப்படுகின்றன இவ்வாறான துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் நாட்டின் தேசிய…
நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் அமீர் அலி தலைமையில்..
கல்குடாத் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகத்தின் மூலம் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய செய்யும் தமிழ் முஸ்லிம் சமூகம் நன்மைபெறப்போகின்றது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி புதிதாக நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று (14.01.2019) திங்கள்கிழமை மாலை வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலயத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு நீர்ப்பாசன…
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றபோது…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று (14) அமைச்சில் தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எச் எம் பௌசி, ஐ எம் இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்
சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், சமூக பற்றாளருமான எஸ்.ரீ. கபீரின் மறைவு வருத்தம் தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அயராது பாடுபட்டு உழைத்த அவர், கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார். சாய்ந்தமருதுவிலும் , அம்பாறை மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்த அன்னார், மக்கள் சேவைக்காக தன்னை பெரிதும் அர்ப்பணித்தவர். பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தனது சமூக பணிகளையும் மேற்கொண்டுவந்தார்….
மட்டக்குளி வாழ் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு மட்டக்குளியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஸ்மாயில் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்டீன், இலங்கை சீமெந்து…
மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்டீன், இலங்கை சீமெந்து நிறுவனத்தின் தலைவர் ரியாஸ் ஸாலி உட்பட…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் முயற்சியினால் மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு..
மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் UAE AID – Emirates Red Crescent தொண்டு நிறுவனத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதி இன்று (11) ஐக்கிய அரபு அமீரக தனவந்தர்கள் மற்றும்…
பிரதியமைச்சராக அப்துல்லா மஹ்ரூப் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சராக இன்று காலை (11/01/2018) முன் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களின் முயற்சியால் தேசிய பாடசாலையாக அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
கடந்த 2 வருடங்களாக இழுபறியில் இருந்த அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தேசிய பாடசாலை விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசனலி சேர் அவர்களினால் முதல் முதலாக கொண்டு செல்லப்பட்ட தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் செயற்திட்டங்கள் இதுவரை காலமும் தட்டிகளிக்கப்பட்ட நிலையில் கடந்த தினங்களில் முன்னாள் கௌரவ. ஆளுனர் ரோகித போகல்லாகம அவரக்ளும் , சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில்…
சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு.
சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இன்று (09) காலை நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொழும்பு யூனியன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கூட்டுறவு ஆணையாளர் நசீர், அகில இலங்கை விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தி தேசிய அமைப்பாளரும் வட மேல்…
யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் 01.யாழ்/நாவாந்துறை ரோமன் கத்தோலிக்க பாடசாலை 02.யாழ் ஒஸ்மானியா கல்லூரி 03. யாழ் கொட்டாடி நமசிவாய பாடசாலை 04.யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் 05.யாழ் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் 06.யாழ் கதீஜா பெண்கள் அரபுக்கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர்…
