Main News
பாயிஸ் பவுண்டேசனின் மற்றுமொரு சேவை!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சுமார் 1500 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு காரியாலயத்தில் அண்மையில் (30) இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
“பெருந்தலைவர் அஷ்ரபின் தேசிய ஐக்கிய முன்னணியின் மறுவடிவம் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” – சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் உரை!
மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 2000ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கதவுகளை மூடிவிட்டு, தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்துவிட்டு சொன்ன விடயம், 2012ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய முன்னணி தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களுமாய் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறும். அதனூடாக அரசியலமைப்பு மாற்றப்பட்டு சிறுபான்மை சமூகத்தவர் ஒருவர் பிரதமராய் வருவார் என்பதாகும். ஆனால் அவற்றை நிறைவேற்ற தலைவர் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீனினூடாக நிறைவேறுகிறது என்று அகில…
முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஓட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!
நீண்டகாலமாக இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம் மக்களை விரைவாக மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்றினை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே 86, ஜே 87 மற்றும் ஜே 88 கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதன் பின்னர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 8வருடங்களாக நான் எமது மக்களின்…
யாழ் ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட நிதியொதுக்கீட்டில், இருபது இலட்சம் ரூபா செலவில் யாழ் / ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மேற்படி வேலைத்திட்டங்களை இன்று (01)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் அமைச்சரின் செயற்திட்ட இணைப்பாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் பார்வையிட்டனர்.
“சம்மாந்துறை கல்வி வரலாற்றில் மற்றுமொரு சாதனை” – இஸ்மாயில் எம்.பி!
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் நமது பாடசாலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். 1975 ஆம் ஆண்டு முதன்முதலாக நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றதுடன் அடுத்த ஆண்டு ஒரே வகுப்பில் கல்வி கற்ற ஒரு மாணவனைத் தவிர இருபத்தி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வரலாற்று சாதனையை நிலைனாட்டியுள்ளனர். அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொருவருடமும் நமது…
“கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்”- இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!
கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடிப் படையினரை கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு பெற்றுக் கொண்டமைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வும், பொதுக் கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில்…
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைப்பு!
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கிராம மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தநிலையில் அவர்களுக்கான விரைவான ஒரு செயற்திட்டமாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுச்சங்க அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின்…
அனர்த்தம் தொடர்பாக பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!!
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அந்தவகையில், கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் (28) இரண்டு மணியளவில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயாகமகே, அலவத்துவல, இராஜாங்க…
மடாட்டுகம பகுதி மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!!
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளிற்கு இணங்க மேர்சி லங்கா நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம பகுதியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது. இது மக்கள் பாவனைக்காக 2018.12.27 அன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பிரதேச மக்கள், மேர்சி லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எம்.ஆர்.எம். முனாஸ், கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினர் ஷாலித்த…
“வடகிழக்கு மக்களின் துயர் துடைக்க இறைவன் எங்களுக்கு சந்தர்ப்பம் தந்துள்ளான்” இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!
இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்பாக முதன்முதலாக வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவருக்கு விவசாய, நீர்பாசனத்தோடு சேர்ந்த கிராமிய பொருளாதார அமைச்சை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியமைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர்,…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பொதுஹெர கிராமிய குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் பொதுஹெர வட்டார வேட்பாளர் ரஜாப்தீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது. எனவே…
