Headlines

விஜித்த ஹேரத்க்கு, 1500 ரூபாய் அபராதம்

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி, நேற்று முன்தினம் இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எதுஎவ்வாறு…

Read More

ஆதிவாசிகளின் பிரச்சினைகள் குறித்த ஆராய தவறும் அதிகாரிகள்

இந்த நாட்டில் வாழும் ஆதிவாசிகள் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்துவருவதாக ரத்துகுல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னில எத்தோ தெரிவித்துள்ளார். தமது இனத்திற்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் கூட கிரமமான முறையில்வழங்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரம்பரிய தொழில்களை செய்து ஜீவனோபாயத்தை கொண்டு நடத்திய தமக்கு ஏனைய தொழில்களை செய்து வாழ்க்கையை கொண்டு செல்வது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய எந்தவொரு அதிகாரிகளும் தம்மிடம் வருவதில்லை என்றும் சுதா வன்னில எத்தோ…

Read More

குரோத அரசியலை கைவிட வேண்டும்!- தலதா அதுகோரள

அரசியல் கட்சிகள் குரோத அரசியலை கைவிட வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல, கந்தேகெதரவத்த, உடுகல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரோத அரசியலை புறந்தள்ள வேண்டியது அவசியமானது. பழி வாங்கும் எண்ணத்தில் அரசியல் செய்யக் கூடாது, அதில் பயனில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த சாந்த…

Read More

குற்றத்தை ஏற்கப் போவதில்லை!- துமிந்தவின் சட்டத்தரணி

லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மூன்று முறைகேடுகள் தொடர்பில் தாம்குற்றத்தை ஏற்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாநீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அவரின் சட்டத்தரணி இதனை அறிவித்தார்.

Read More

இலங்கையில் காலூன்றும் இஸ்ரேல்!

வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு பலத்த…

Read More

கைத்தொழிற் துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்

தங்கொட்டுவ கைத்தொழில், வர்த்தக வலயத்தில், கைத்தொழிற் துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் நேற்று (31/05/2016) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கைத்தொழில்,வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் தென்னகோன், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிருவனங்களின் உயரதிகாரிகள், முதலீட்டாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், முதலீட்டுத் துறையில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினர். அத்துடன் தொழிலாளர்களின் நல உரிமைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

Read More

பாபர் மஸ்ஜித் சர்ச்சைக்கு தீர்வு

பாபர் மசூதி சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் இந்து, முஸ்லிம் தலைவர்கள் இன்று (31) ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேலாக இந்த சர்ச்சை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான தீர்வு காணும் வகையில் இந்து, முஸ்லிம் தலைவர்கள் இன்று ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அனைத்திந்திய அகாரா பரிஷத் அமைப்பின் புதிய…

Read More

அமைச்சர் றிஷாத்தின் வழிகாட்டலில் இயக்கி வரும் ஆடைத்தொழிற்சாலை

“கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு.  அந்த வகையில் வவுனியாவில் தையல் பயிற்சி  பெற்ற 40 யுவதிகள் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். கைத்தொழில்,வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தினால் (SLITA) அமைச்சர் றிசாத் பதியுதீனின்  வழிகாட்டலில், சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்கி பின்னர் சான்றிதழ்களும், தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம்…

Read More

ஆதரித்தவர்களுக்கு மாத்திரம் உதவி – விமல் கண்டுபிடுப்பு

அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் மக்களை பார்க்கச் சென்றவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் யாரென்று தேடிச்சென்று உதவிகளை வழங்கியமையும் கட்சி சார்ந்து உதவிகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கம் தம்மை ஆதரித்த நபர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசாங்கம் குறுகிய நோக்கத்தில் செயற்பட்டாலும் நாம் இன மத பேதமின்றி உதவிசெய்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட…

Read More

கிழக்கு முதலமைச்சரும் பாதுகாப்பு படைவீரர்களும்

கடந்த (20.05.2016) ஆம் திகதி திருகோணமலை சாம்பூரில் இடம்பெற்ற பாடசாலை விழாவொன்றில் முதலமைச்சர் நஸீர் அகமத்தை பற்றி  ஊடகங்களில் பூதாகரமான செய்திகள் வெளியிடப்பட்டன. பொதுக்கூட்டமொன்றில், அதுவும் பாடசாலை மாணவர்களும், அமெரிக்க தூதுவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது வார்த்தைப் பிரயோகங்களும் நடந்து கொண்ட முறையும் கண்டிக்கத்தக்கது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அத்தகைய நடத்தைக்கு அவர் உந்தப்பட்டாரா என்பதை அறிவது மிக முக்கிமாகும். 13 ஆம் யாப்புத் திருத்தத்தின் மூலம்  உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்; , அத்தோடு…

Read More

வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு

களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 13,000 இற்கும் மேற்பட்டோர் 169 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அத்துடன், மழையுடன் கூடிய வானிலையால் முற்றாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

 புதிய அரசியலமைப்புக்கு 5,000 யோசனைகள்

புதிய அரசியலமைப்பு தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளைப் பதிவு செய்யும் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

Read More