Main News
மஹிந்தவிற்கே அஞ்சாத நாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை – ராஜித
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே அஞ்சாத தாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாளைய தினம் நடத்த உள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 15 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக கடயைமாற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நியமனங்களில் தலையீடு செய்ததில்லை எனவும், பல்கலைக்கழகங்களில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு; உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ சங்கம்…
நான்கு வகையான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.
ஞானசாரரை பிடிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை. கடந்த 2015ம் அண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் சட்டங்களை மீறி வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்
23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு விசேட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதிலும் காணப்படும் சுமார் 10,000 பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பாடசாலை கட்டமைப்பை உரிய…
இலங்கையுடன் ஒத்துழைக்க தயார்- சீசெல்ஸ்
இலங்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என்று சீசெல்ஸ் அறிவித்துள்ளது. சீசெல்ஸின் சமூக மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சன்ட் மேரிடன் இதனை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில் உறவை கட்டியெழுப்ப இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற வகையில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தநிலையில் சீசெல்ஸ் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க அந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட தயார்…
மீண்டும் பெய்யும் அடைமழையினால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு
நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் சீற்றத்தினால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நீலகந்த பிரதேசத்தில் களுகங்கையின் வெள்ள நீர் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேர் நான்கு அனர்த்த முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பத்தேகம, தொடங்கொட, உனன்விட்டிய ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய…
குமார வெல்கம நிதிக் குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில்
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொலிஸ் நிதிக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் இன்று (30) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக பதவி வகித்த கடந்த ஆட்சியின்போது பஸ் வண்டிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்று ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை.!
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது. அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது. எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில்…
கொரிய வேலைவாய்ப்பு : பரீட்சை இனிமேல் நடைபெறாது!
கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை இனிமேல் நடைபெறாது என இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்கொரியாவில் வேலை வாய்ப்புக்காக தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளும்பொருட்டு நடத்தப்படும் கொரிய மொழி விருத்தி எழுத்துப்பரீட்சை இந்த வருடம் முதல் இடம்பெறாது. அத்துடன் இணையத்தளம் முறைமையில் நடத்தப்படும் என கொரிய மனிதவள அபிவிருத்தி திணைக்களத்தின் இலங்கையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது…
அமரர் சிவாவின் மறைவு தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரிழப்பு! – அமைச்சர் றிஷாத் அனுதாபம்
தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் அவர்களின் மறைவு, தமிழ் பேசும் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். “சிவா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அமரர் சிவா சுப்பிரமணியம், எழுத்துத் துறையிலே தடம் பதித்தவர். பத்திரிகை உலகிலே அவர் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். சிறந்த பத்தி எழுத்தாளராக இருந்து தனது கருத்துக்களை நாசூக்காக வாசகர் மத்தியில் பதியச் செய்வதில் வல்லவராக இருந்தார். எழுத்தாளன் ஒருவன் இப்படித்தான்…
சிறிய குண்டுவெடிப்பு இடம்பெற்ற நெலுந்தெனிய பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்
-ஏ.எல்.எம். லதீப் – நெலுந்தெனிய பள்ளிவாசலில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னர் நேற்று மாலை (29/05/2016) அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்து பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும், பள்ளிவாசளுக்கென கண்காணிப்பு கேமராவை பெற்றுத்தர வேண்டுமென நாம் விடுத்த கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார் என்று பள்ளிவாயல் தலைவர் ஜனாப் மசூத் தெரிவித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கிராமத்திலே சிறிய பதட்டம் நிலவியதாகவும்,…
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி
நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் (26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மடிகணனியைப் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்காக 75,000 ரூபா நிதி இலகு கடனாக வழங்கப்படுகிறது. நாடளாவிய…
