Headlines

நகரங்களின் அபிவிருத்திக்காக 55 மில்லியன் டொலர்கள்

இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக 55 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அபிவிருத்தி, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், காலி, கண்டி ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த நிதி பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகவங்கியால் வழங்கப்படவுள்ள குறித்த நிதியானது குறைந்த வட்டியுடன் 5 வருடஇடைவெளியில் 25 வருடங்களில் மீள் செலுத்துவதற்கு ஏதுவாக வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்….

Read More

கொழும்பில் 2500 டொன் கழிவுகள் அகற்றப்பட்டன

வெள்ளத்திற்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்ட 2500 டொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாட்டில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை கொலொன்னாவை, மீதொட்டமுல்ல, கொட்டிகாவத்த முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கொதடுவ, கொஹிலவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்களும் இப்பணிகளில் இணைந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு…

Read More

முன்னாள் நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானை குட்டி ஒன்றை வைத்திருந்தார் என இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்களின் காரணமாக திலின கமகே கட்டாய விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னிணைப்பு இன்று கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே பினனயில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More

ப்ரெடி கமமே மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்

இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஊடகவியலாளர் ப்ரெடி கமமே மீது, நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அரசாங்கம் கண்டித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷனி குணதிலக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ப்ரெடி கமகே, இன்று நீர்கொழும்பு நகர சபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய பட்டியலுக்கு சுகாதார அமைச்சர் அனுமதி

புதிதாக வழங்கப்படும் வைத்தியர் பதவி நியமன பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷடி சில்வா தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய பட்டியலை நாளை health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்கலாம். இன்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால தலைமையில் குறித்த நியமனப் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து உதவுங்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்கு வாரத்தில் ஒரு முறையேனும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நேற்று (01) முற்பகல் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read More

நாட்டு மக்கள் வலியுறுத்தும், பிரதான 3 விடயங்கள்..!

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முற்றாக நிராகரித்திருப்பதாகவும் உண்மையான ஜனநாயகம் பிரதிபலிக்கக் கூடியதான அரசியலமைப்பின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க நேற்று புதன்கிழமை விசும்பாயவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். தற்போதுள்ள கட்சித்தாவல் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமெனவும், தேர்தலில் தோல்வி கண்டவர்கள் மாற்று வழிமூலம் பாராளுமன்றம் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட வேண்டுமெனவும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர். நாட்டின் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்தறியும்…

Read More

தனிமனிதரின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹர்ச டி சில்வா

தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் கெமுனு விஜேரத்தின அவருக்கு வேண்டியதைப் போன்று பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

Read More

கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் மாற்றம்

கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள பகுதிகள் சிலவற்றில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் டீ.சீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதன் காரணமாக அதிவேகப் பாதை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது அதிகம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பாதையில் பொத்துஎரயிலிருந்து கலகெதர வரையான பகுதியிலே மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும், இந்தப் பகுதிகளில் உள்ள…

Read More

இலங்கை – சிங்கப்பூர் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவெடுக்கப்படும்!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.   இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த புதன்கிழமை 1ஆம் திகதி கிங்ஸ்பெறி ஹோட்டலில் வைத்து இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்களினை சந்தித்து உரையாற்றுகையிலேயே இதனைதெரிவித்தார்.   வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் வணிக வாய்ப்புக்களை ஆரம்பிப்பதுதொடர்பிலும் இரு தரப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளைவலுப்படுத்தும் நோக்கிலும் அவரின்…

Read More

சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்தின் விலையானது 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று (1) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை வழங்கியுள்ளது. இதற்கமைய 870 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து ஒரு மூட்டையின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 வகையான சீமெந்து நிறுவனங்களின் சீமெந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தங்கள் என்பது யாருக்கும் சொல்லிக் கொண்டு வருவதில்லை இதன் காரணமாகவே மனிதன் உற்பட உயிரினங்கள் அனைத்தும் அதன் அகோரத்தினை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தம் என்பது பூகம்பமாகவோ, தீயாகவோ, வெள்ளம் மழை காரணமாகவோ அல்லது கடுங் குளிர் அல்லது பனிமூட்டம் காரணமாகவோ ஏற்படலாம். இவை காரணமாக பூமியில் வாழும் உயிரினங்களின் இயல்பு…

Read More