Main News
முகநூல் (Facebook) தொடர்பில் 925 முறைப்பாடுகள்!
கடந்த ஐந்து மாதங்களில் முகநூல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தை பிழையாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 925 முறைப்பாடுகளில் சுமார் 95 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
கொஸ்கம கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம்
வெடிப்பு ஏற்பட்ட அவிசாவளை – கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் சுற்றி உள்ள பகுதிகளை பார்வையிடுவதற்காக வருவதைத் தவிர்த்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. தற்போது பிரதேசவாசிகள் அதனை பார்வையிடுவதற்கு வருவதால் கடும் வாகன நெரிசலுடன் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த இந்த தீ பரவலின் பின்னர் அந்த பிரதேசத்தை சுற்றிவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கலவரமான நிலையுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 என்ற ஹெலிகொப்டர்…
25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டை குடியுரிமை வழங்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாவை சேர்ந்த…
மூடப்படுகிறது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…
முச்சக்கரவண்டி சாரதி, அனுமதிப்பத்திர வயதெல்லை 23..?
முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான வயதெல்லையை 23ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்புத் தொடர்பிலான அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அகில இலங்கை முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டீ.ஆர்.ஆர்.பள்ளி இதனை முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென ஒரு குழுவினை நியமிக்குமாறு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!
ஒரு விவசாய நாட்டைக் கட்டியெழுப்பி விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் விவசாய சமூகத்திற்கு தமது உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது உற்பத்திகள் நுகர்வோரின் கைகளுக்கு சென்றுசேரும் வரையில் பெருமளவான இடைத்தரகர்கள் உள்ள காரணத்தினால் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற…
மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படை கப்பல் இலங்கைக்கு!
கல்கத்தாவிலிருந்து மொரிஷியஸுக்கு சென்று கொண்டிருந்த மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படையின் ‘சீஜிஎஸ் பர்ரகியுடா’ எனும் ஆழ் கடல் ரோந்து கப்பல் நேற்று முந்தினம் (2) ஹம்பாந்தோட்ட துறைமுகத்திற்கு வருகை தந்தது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், இக்கப்பல் இன்றைய தினம் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் இருந்து மொரிஷியஸ் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு
இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் பாடசாலை…
வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல் இணையத்தில்
உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியலை இணைய மயப்படுத்தும் பணிகளை, சுகாதாராத அமைச்சின் கணினி பிரிவு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமைக்குள் இந்த பெயர்கள் இணைய பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இடையில் இதற்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
ரமழான் தலை பிறை மாநாடு 06 ஆம் திகதி
ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் நாள் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய் இரவாகும். எனவே அன்றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேரமான 6.24 மணிமுதல் ரமழான் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியுள்ளது. பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரில் அல்லது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்றிற்கு அறியத் தருமாறும் தெரிவித்துள்ளது….
ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு
இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மூன்று மாதங்களுக்கு மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…
