Headlines

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தாத தேர்தல் முறைக்கு நாம் ஆதரவில்லை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச தேர்தல் நிபுணர் வொலோனை, அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். தேர்தல் நடைமுறை மாற்றம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் நிபுணர் வொலோனை, கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (08/06/2016) பாராளுமன்றத்தில், அமைச்சரின் காரியாலாய அறையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, நவவி எம்.பி, இஷாக் எம்.பி உட்பட பலர் பங்கேற்று,…

Read More

தகவல் அறியும் சட்டமூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

Read More

மீண்டும் சடலமாக சிறுத்தை மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (8) காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

Read More

சிதறியுள்ள ஆயுதங்கள் வெடிக்கும் அபாயம்

கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்றுவருகின்றன. மேலும் தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுத்ப்பட்டிருந்த பகுதி இப்போது 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளதுடன்  ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் 6 கிலோமீற்றர் பரப்பு தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுதப்பட்டிருந்த  நிலையிலேயே   இப்போது அந்த பரப்பு 500…

Read More

தாடி வைத்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பணி நீக்கம்

இந்திய ராணுவத்தில் பணிப்புரிந்த மக்தூம் ஹுசைன் தாடி வைத்திருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றமும் அவரை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடாக இருந்தும் 2 சதவீதம் உள்ள சீக்கியர்களால் தாடி வைத்து அனைத்து அரசு பதவிகளிலும் பணியாற்றும்போது 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களால் தாடி வைக்க முடியவில்லை என்றால் இந்திய சட்டம் அதிகாரிகளால் கேள்விக்கூத்தாக்கபடுகிறது என்பது ஒருபுறம்…

Read More

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் ஞானசாரவுக்கு பிணை

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை…

Read More

பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர் இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி…

Read More

அளுத்கடையில் இருந்து ஆரம்பிப்போம்

காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) பகல் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அளுத்கடை நீதிமன்றிற்கு முன்னால் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது ‘அளுத்கடையிலிருந்து ஆரம்பிப்போம்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் எதிர்ப்பு முன்னணி உள்ளிட்ட பல இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் இதை ஒழுங்கு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அழிவடைந்து வரும் இயற்கையை…

Read More

ஜனாதிபதி மாளிகை இன்று முதல் மக்களின் பார்வைக்கு!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா என்பவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி இன்று (08) முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதோடு, இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 29 ஆளுநர்கள் மற்றும் 06 ஜனாதிபதிகள்…

Read More

பல்கலை அனுமதி இணையம் ஊடாக விண்ணப்பிக்கலாம்!

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையங்கள் ஊடாக தமது விண்ணப்பத்தினை அனுப்ப முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்!

சாலாவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் அப்பிரதேச மக்களது முற்றாக சேதமடைந்த வீடுகளையும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்து கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு வழங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

Read More

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Read More