Main News
தடைசெய்யப்பட்ட வலயம் சிறிதானது
– மேனகா மூக்காண்டி, ஜே.ஏ.ஜோர்ஜ் – கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதனைச் சுற்றியுள்ள 500 மீற்றர் அளவிலான பிரதேசம் தடைசெய்யப்பட்ட வலயமாக காணப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட, நான் தயாரில்லை – மைத்திரி திட்டவட்டம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்காக கோட்டாபயவின் பெயரை முன்மொழிவதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறானதொரு யோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதுஇவ்வாறு இருக்க, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட தான் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. நேற்று -06- இரவு அரசாங்கத்தைப்…
வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்
றகர் வீரரான வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…
நான்கு பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர்
அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மாத்திரமே இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக பாதுக்க வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவிசாவளை, ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். எனினும் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில் நால்வர் மாத்திரம் இன்னமும் சிகிச்சை…
கராத்தே வீரர் வசந்த செய்சா கொலையின் 27 சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை
கராத்தே வீரர் வசந்த செய்சாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 27 சந்தேகநபர்களையும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதவான் மஞ்சுலா திலகரத்ன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, பிரதான சந்தேகநபரை தவிர ஏனையவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 10,000 ரொக்க பிணையிலும், ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி…
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், நோன்பு பிடிக்கத் தடை
சீனாவில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். இன்று முதல் சீனாவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கடைப்பிடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்…
10%மான ஆயுதங்களே இருந்தன
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையை இவ்வருட இறுதிக்குள் அவ்விடத்திலிருந்து முழுமையாகவே அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்து என்று தெரிவித்த மேற்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பெருந்தொகையான ஆயுதங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு, 10 சதவீதமான ஆயுதங்களே இருந்தன என்றும் கூறினார். ‘அங்கு களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் யாவும், தரப்படுத்தப்பட்டே நிலத்துக்கு கீழ் மற்றும் நிலக்கீழ் சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தன’ என்றும் அவர் தெரிவித்தார். ‘இங்கு களஞ்சியப்படுத்தப் பட்டிருந்த ஆயுதங்கள்,…
மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்ப நடவடிக்கை!
இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார். குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், முதலில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். மேலும் இது தொடர்பாக பொலிஸார் மற்றும் முப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர். குறித்த பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் பணியானது இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்று…
நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது. இது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை…
கொஸ்கம தீ: அபாய வலய எல்லை குறைப்பு
கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து முகாமைச்சுற்றி பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அபாய வலய எல்லை, ஆகக் குறைந்தது 500 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாதுக்க – அவிசாவளைக்கு விசேட ரயில் சேவை
கொழும்பு – அவிசாவளை வீதி மூடப்பட்டுள்ளமையால் பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வீதி மூடப்பட்டுள்ளது
