Headlines

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சூரிய சக்தி




அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கும் சூரிய சக்தியை (சோலார் பெனல்கள்) பயன்படுத்த, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக, மின்சாரத்தை சேமிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் மின்விளக்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சக்தியை மிச்சப்படுத்தி, அதனை தேசிய மின் கட்டமைப்புக்குள் சேர்ப்பது தொடர்பில் அமைச்சினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *