Main News
புதிய பொருளாதார வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!
எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிய பொருளாதாரத் திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கதெரிவித்துள்ளார். குறித்த புதிய பொருளாதார திட்டங்களானது எதிர்வரும் நாட்களில் பிரதமரால்அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பேருவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனியின் விலை உயர்வு!
மக்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 118 முதல் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது. உலக சந்தையில் துரித கதியில் சீனியின் விலை உயர்வடைந்து செல்கின்றது. இந்தியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியினால் இவ்வாறு சீனி நிரம்பலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு…
சிறைச்சாலை உணவை நிராகரித்தார் கம்மன்பில
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சிறைச்சாலை உணவு வகைகளை நிராகரித்துள்ளார். நேற்று (20) முதல் வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொண்டு உட்கொண்டு வருகின்றார். கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உதய கம்மன்பில தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆவண மோசடி செய்து சொத்துக்களை அபகரித்துக்கொண்டதாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி முதல் நேற்று முற்பகல் வரையில் சிறைச்சாலை உணவை உதய கம்மன்பில உட்கொண்டார். எனினும், தொடர்ந்தும் சிறைச்சாலை…
அரசியல்வாதிகளை உலமா சபை வழிநடத்த வேண்டும் – நவவி
புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளை புத்தளம் பெரியபள்ளி மற்றும் உலமா சபை என்பன வழிநடத்த வேண்டும்” என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இயங்கிவரும் விஞ்ஞானக் கல்லூரியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “கல்வி விடயத்தில் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும். எந்தக் கட்சியாக…
பஸ் கட்டணங்கள் அதிகரிக்க தீர்மானம்
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்கள் 3.2 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்று இன்று (20) இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே குறித்த கட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.
அனர்த்த பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!
எதிர்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீண்டகால வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்துக்கு கடந்த 18 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் உறுதியளித்தார். அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாத வகையிலும்,…
வெலிக்கடை சிறைச்சாலைக்கு படையெடுக்கும் கூட்டு எதிரணியின் எம்.பிக்கள்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். அவர்ளுடன், பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…
ஞானசார தேரர், சிறைச்சாலைக்கு சென்றார்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் (20) தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…
விரைவில்… பொலிஸாருக்கான புதிய ஒழுக்க விதி கோவை
பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய ஒழுக்க விதி கோவையை தயாரிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். பொலிஸார் பொதுமக்களுடனான சுமூகமான உறவை பேணுவதற்காகவும் மக்களுடன் இணைந்து செயற்படும்போது பொலிஸார் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கி குறித்த ஒழுக்க விதிக் கோவை தயார் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச அச்சகர் காமினி பொன்சேகா இராஜினாமா
அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் காமினி பொன்சேகா தனது பதவியை இன்று (20) இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தினை ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் பொபகேவிடம் இன்று காலை கையளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவருக்கு எதிராக பல தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களே இவரது இராஜினாமாவிற்கு காரணமென அரச அச்சுத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.க்கு எதிராக முறைப்பாடு
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக இன்று (20) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியனவே மேற்படி முறைப்பாடுகளை செய்துள்ளது. எஸ்.பி. திஸாநாயக்க ஊக்குவிப்பு நீதியில் முறைக்கேடுகள் செய்துள்ளதாகவே குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில், யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம்…
