Main News
பிள்ளையானுக்கு பிணை மறுப்பு
முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21.7.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக…
நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது.tm
அஞ்சவில்லை :ஜெனிவாவில் மங்கள
இலங்கையானது நீதிப்பொறிமுறை விடயத்தில் சர் வதேச பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அஞ்சவில்லை. கடந்தகாலங்களில் பல விடயங்களில் சர்வதேச பங்களிப்பினை பெற்றுள்ளோம். சர்வதேச பங்களிப்பில் பல தன்மைகள் காணப்படுகின்றன. ஆனால் இவை குறித்து ஆலோசனை செயற்பாட்டிலேயே தீர்மானிக்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். எவ்வாறெனினும் நீதிப்பொறிமுறையானது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்கான பாதை சவாலாகவுள்ளது. ஆனால் அது நல்லிணக்கத்தையும் இலக்கையும் கொண்டதாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவாவில்…
ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா
முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை
“சத்தோச” பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
தவறு செய்தவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை!- பிரதமர்
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகோப் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால்அவர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றைய தினம் (29) வழங்கிய நேர் காணலிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின்…
ஞானசாரரை, கைதுசெய்ய வலியுறுத்தி மனு – RRT அதிரடி
பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக தெரிவித்தும் அவரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் சட்டத்தரணிகள் இன்று முறைபாடு செய்துள்ளனர். இதனை சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார். 3 வேறு வேறு முறைபாடுகள் ஞானசாரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. RRT Legal update Today 29.06.2016 RRT Made three complaints against Ganasara Himi at police head quaters under sections of Penal code & Prevention…
எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார்
மஹியங்கனை சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் … மஹியங்கனையில் அளுத்கமை போன்ற கலவரம் உருவானால் அதற்கு முஸ்லிம் கவுன்ஸிலே பொறுப்புக் கூறவேண்டும்.அளுத்கம சம்பவத்தின் பின்னணியும் முஸ்லிம் கவுன்ஸிலே என சந்தேகிக்கின்றோம் பௌத்தர்கள் முஸ்லிம் கொடியையோ குர்ஆனையோ எரிக்கவில்லை. மஹியங்கனையில் முஸ்லிம்களே பௌத்த கொடியையும் வெசாக் கூடுகளையும் எரித்துள்ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்லிம்களை கண்டிக்காது அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தாது…
பெருநாளுக்கு அடுத்த தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்குக
அரசு, எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதியை நோன்புப் பெருநாள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதால் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி பெருநாள் தினத்தையடுத்த தினங்களான 7 ஆம் திகதி வியாழக்கிழமை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தும்படி முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சருக்கு இது…
கொரியா சர்வதேச நிறுவனத்தினால் அதிக நன்கொடைகள்
நாட்டில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையிலும், வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் கொரியா கொலோன் சர்வதேச நிறுவனத்தினால் அதிகளவிலான நன்கொடைகள் நமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்கும் வகையில் 12,000,000 ரூபா பெறுமதியான 03 தண்ணீர் தாங்கிகளும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 8,000,000 ரூபா…
அல் அக்ஸாவை மூடியது இஸ்ரேல்
ரமழான் மாதம் முடியும் வரை ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை யூதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு மூடி வைக்க இஸ்ரேல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் வழிபாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸாருக்கு இடையில் மோதல் இடம்பெற்ற நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித மாதம் முடியும் அடுத்த வாரம் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரமழான் மாதத்தில் யூதர்கள் பள்ளிவாசல்…
GSP வரிச்சலுகையை மீளப்பெற அரசு விண்ணப்பம்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியது. இந்தச் சலுகையை மீளப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கம், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நேற்று முறைப்படி விண்ணப்பித்தது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா; இலங்கை…
