Main News
அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்
சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…
காத்தான்குடியில் திடீரென முழைத்த பேரீத்தம் மரம்
– அபூ ஷஹ்மா – காத்தான்குடி முதலாம் குறிச்சி, பிரதான வீதி, அந் நாஸர் வித்தியாலயத்திற்கு அருகே நேற்றிரவு திடீரென நடப்பட்ட பேரீத்தமரம் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது. இந்த மரம் திடீரென அவ்விடத்தில் முழைத்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் இம்மரம் வீதிப் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாகவும் இதை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் கேட்டுகொண்டதற்கிணங்கவே எடனடியாக அது அகற்றப்பட்டது. கடந்த நோன்புப் பெருநாள் இரவில்…
“நபிகள் நாயகத்தின் அடக்கத்தலமருகிலும் விவாதத்திற்கு தயார்” – ஞானசார
பௌத்த சமயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களுக்கு எதிராக பாணந்துறை கொள்கை போன்ற வாத விவாதங்களுக்கு தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி்ல் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பன்றி ஒற்றன் அண்மையில் எமக்கு விடுத்த கொலை அச்சுறுத்தல் பேச்சு காரணமாக மிகவும் சிறந்த வழி உருவாகியுள்ளது. அங்காங்கே இருந்து கொண்ட திருட்டு கல்லை பொறுக்கி கண்ணாடி மாளிகைகளுக்கு கல்லெறியாமல்,…
அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி
ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று (8) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வட் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களுக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமைச்சர் உள்ளிட்டவர்கள் தயாராக இருக்க…
ஷீயா பிரதிநிதிகள் தெவட்டகஹ ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு விஜயம்
ஈரானின் மறைந்த முன்னாள் ஆன்மீகத் தலைவர் கொமைனியின் பேரனான ஆயதுல்லா செய்யத் ஹஸன் கொமைனி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவர் இன்று (08) ஜூம்ஆத் தொழுகைக்காக கொழும்பு 07 இல் உள்ள தெவட்டகஹ ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட படம். குறிப்பு: ஷீயாக்களின் பரவல் இலங்கையில் அதிகரித்தள்ள நிலையில் ஈரான் பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்தை முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானியுங்கள். இலவசக் கல்வி என்ற போர்வையில் இலவசமாக பணம் வழங்கப்பட்டு ஷீயாக் கொள்கை இலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது –…
ஜாகிர் நாயக் மீதான நெருக்குவாரம் – ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகள்
டாக்டர் ஜாகிர் நாயக் உரைகளை எல்லாம் மீளாய்வு செய்ய சொல்லுவதால் இது வரை இஸ்லாமை ஏற்ற மக்கள் விட இன்னும் பல மடங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை வாழ்வியல் நெறியாக இந்தியாவில் ஏற்பதற்கு காரணமாக மாறப்போகின்றது . அறிவார்ந்த உழைப்பை தீவிரவாதம் என்ற சூழ்ச்சி வலையோடு சிக்க வைத்து உலக மக்களையும், டாக்டர் ஜாஹிர் நாயக்கயும் உளவியல் வதைக்கு சிக்க வைத்து சத்திய அழைப்பை தவிர்க்க வைக்கும் இது ஒரு ஷைத்தானிய வர்க்கத்தின் கூட்டு முயற்சி…
வற் வரி தொடர்பில் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நியமனம்!
வற் வரி தொடர்பில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேலும் 1100 அரச அதிகாரிகள் வேலைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் சில பிரதேசங்களில் அநீதியான முறையில் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றினை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் எவற்றுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. அவ்வகையில் வற் வரி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த…
சாலாவ வெடிப்பு சம்பவத்தில் 1800 வீடுகள் சேதம்
அண்மையில் இடம்பெற்ற சாவாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால் சுமார் 1800 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மதிப்பீட்டு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் முற்றாக வீடுகள் அழிவடைந்த 401 குடும்பங்களுக்கு 50,000ரூபாய்அடிப்படையில் மாதாந்த வாடகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 150குடும்பங்களுக்கு குறித்த நிவாரண பணம் வழங்கப்படவுள்ளது. மேலும், 850 வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000ரூபாய் மாதாந்த வாடகை வழங்கதீர்மானித்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக வழங்குவதற்கு அமைச்சரவையின்அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலித தெவரப்பெருமவுடன் செல்பி எடுத்த பாலித ரங்கே பண்டார
களுத்துறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அங்கு அவருடன் செல்பி எடுத்துகொண்டார். மத்துகம, மீகஹாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்துக்குள் பெற்றோர் சிலருடன், அத்துமீறி நுழைந்து 10 மாணவர்களை பாடசாலையில் இணைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக, அவர், செவ்வாய்க்கிழமை மாலை சென்றிருந்த போது, கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பாலித, சரணடைவதற்குச்…
4000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
மின்சார சபையுடன் இணைந்த மற்றும் மனித வலு குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதி முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்…
ஜம்இய்யத்துல் உலமா, வன்மையாகக் கண்டிக்கிறது..!
மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரமழான் மாதத்தின் இறுதி நாளில் முஸ்லிம்களின் புனித இடமான முஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி மக்களை இலக்குவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 5…
ஆரையம்பதியில் சிறுத்தையின் உடலம்
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள பெரிய சந்தைக்கு முன்பாக புதன்கிழமை (06) இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. இந்தச் சிறுத்தை எங்கிருந்து வந்தது என்பதுடன், எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வனவளத் திணைக்களத்திடம் இந்தச் சிறுத்தையின் உடலத்தை பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உணவு தேடி இந்தச் சிறுத்தை நகருக்குள் வந்திருக்கலாம் எனவும்…
