Main News
பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு அவதானம்!
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பங்களாதேஷ் தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னரே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இந்நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். எமது நாட்டின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுகின்றனர். நேற்று முந்தினம்(02) பங்களாதேஷ் டாக்கா உணவகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு உரிய பயிற்சி கிடையாது
இலங்கை ஊடகவியலாளர்களுக்கு போதியளவு பயிற்சி கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலி அலோசியஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஊடகத்துறை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் காண்பித்து வரும் அக்கறை எதிர்காலத்தை சிறந்த வகையில் அமைக்கும். ஊடகத்துறையில் காணப்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்று போதியளவு பயிற்சி இன்மையாகும். சில வேளைகளில் நாம் உரையயொன்றை ஆற்றினால் மறுநாள் காலையில் முற்றிலும் மாறுப்பட்ட…
போராட்டம் வெற்றியாம்!
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. இன்று (4) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்றையதினம் அரை நாள் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையிலேயே தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த வேலை நிறுத்தம்…
நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்
நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…
எதிர்கால கட்டட நிர்மாணம் அனுமதி பெறப்படுவது கட்டாயம்
இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைஅமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்றுகொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின்போது அதிக பாதிப்புக்கான ஏதுக்களை குறைக்கும் நோக்கிலேயேஇந்த கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதைக்கு 10 மாவட்டங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. எனினும் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. நாடாளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒருலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டிl ஆராய்ச்சி…
இலங்கைக்கு நிதியுதவி முன்னணியில் சீனா!
இலங்கைவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, இலங்கை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் மொழி கற்பிக்கும் விமலசார தேரர்
“பிற மொழியையும் தெரிந்து வைத்திருங்கள். அது பிறரோடு பழக உதவும். அடுத்தவரை அணுக உதவும். வெறும் மொழிப்பித்து என்பது உங்களைக் கிணற்றுத் தவளையாக்கிவிடும். கிணற்றுத் தவளையும் நீந்தும் உயிர்வாழும். ஆனால், உலகத்தின் அனுபவமும் அளவும் அதற்குச் சிறியதாகத் தெரியும்” என முகம் கொள்ளாத சிரிப்புடன் எம்மோடு பேசத் தொடங்கினார் குட்டிக்குளமே விமலசார தேரர். “இந்த இனிப்பான தருணத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என இலக்கணத் தமிழில் தேன் சுவையாக கூறினார் 32 வயதான…
அல்லாஹ் தொடர்பிலும், குர்ஆன் தொடர்பிலும் எவ்வேளையிலும் விவாதத்துக்கு தயார் – BBS
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்து மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா…
மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கடந்த மாதம் 20ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாகபயன்படுத்தியமை தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஞாயிறு தனியார் வகுப்புக்கு தடை
மத்திய மாகாணத்தில் ஞாயிறு தினங்கங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபையின் ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன்படி இந்த தடை இன்னும் இருவாரங்களில் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை…
7 வருடங்களாக தொழில் அதிகாரிகள் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை
தொழில்துறைசார் அதிகாரிகள் மாட்டு வண்டி யுகத்திலிருந்து விடுபட்டு புதிய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தொழில் அமைச்சில் 202 வெற்றிடங்கள் நிலவுகின்றன. கடந்த ஏழு வருடங்களாக எந்தவொரு வெற்றிடமும் நிரப்பப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரச சேவை ஊழியர் உத்தியோகத்தர் சங்கத்தின் 65ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து…
தலைப்பிறை பார்க்கும் மாநாடு
ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்பு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய மாலை 6.31 மணிமுதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும் பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவது ஒன்றின் ஊடாக அறியத்தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரியபள்ளிவாசல் கேட்டுக்…
