Headlines

மீண்டும் நாளை கூடும் கோப்குழு

பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் (கோப்குழு) பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவானது தனது விசாரணை நடவடிக்கைகளுக்காக மீண்டும்  நாளை கூடவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்திநெத்தி தேசிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் பதவிகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய பிணைமுறி விற்பனை மோசடி குறித்து கோப் குழுவில் அங்கம் பெறும் எமது குழுவினர் மும்முரமான விசாரணைகளை முன்னெடுத்து…

Read More

கச்சதீவை இந்தியா ஒருபோதும் கோரமுடியாது

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, தமிழ்­நாட்டு மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்­கவே கச்­ச­தீவை மீட்போம் என்ற விட­யத்தை ஜெய­ல­லிதா முன்­வைக்­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் கூறு­கையில், 1976 ஆம் ஆண்டு இந்­திய பிர­த­ம­ரான இந்­தி­ரா­காந்­தியால் சட்­ட­ரீ­தி­யாக உடன்­ப­டிக்கை மூலம் அன்­றைய இலங்­கையின்…

Read More

கொரியா செல்கிறார் மஹிந்த!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சில தினங்­களில் தென்­கொ­ரியா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பொது எதி­ரணி புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக தெரிவிக்கப்பட்டு வரு­கின்ற நிலை­யிலும் நிழல் அமைச்­ச­ரவை அமைக்­கப்­பட்­டுள்ள சூழ­லிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தென்­கொ­ரி­யா­விற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி இழந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த…

Read More

நாமல் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ 70 மில்லியன் மோசடி தொடர்பில் இன்று (11) நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்க்ஷ,இலங்கையின் முதன்மையான விளையாட்டு கழகத்தின் ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து நன்கொடை கேட்டுள்ளார். இருப்பினும் இந்த பணம் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகவே நாமல் இன்று நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,இந்த…

Read More

கோதபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். கோதபாய ராஜபக்ச கடந்த ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகள் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் என கோதபாய குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றார்.

Read More

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆட்பதிவுத்திணைக்களத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பொதுநிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு நகரசபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன ஒன்றினைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முப்படையினர், கொழும்பு நகரசபை, அரச நிறுவனங்கள் என்பன சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன….

Read More

இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் Wencai Zhang உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று  முன்தினம் (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும்…

Read More

“ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா”

புத்தளம் அல்-காசிமி “இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்” இன்று (9) மாலை அல் – காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி,…

Read More

உள்விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

வெளிநாட்டு நீதிமன்றத்திற்கோ, நீதிபதிக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ எனது நாட்டின் உள்விவகாரங்களிலும்  நீதித்துறையிலும் தலையிட இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த யுத்த காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதற்கும் அல்லது வெளிநாட்டு யுத்த நீதிமன்றங்களை எந்தவொரு இடத்திலும் எந்த வகையிலும் அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் தாம் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்வரை அதற்கு ஒருபோதும்…

Read More

இதுவரை 800 மெற்றிக் தொன் கழிவுகள் அகற்றம்

கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் அப் பகுதியில் இருந்து 800 மெற்றிக் தொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எட்டு நாட்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்றிவிட முடியும் எனவும் குறித்த அமைச்சு கூறியுள்ளது. சலாவ இராணுவ முகாமுல் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தின் பின்னர், அப் பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் நிமித்தம் மேல் மாகாண நிர்வாக…

Read More

சீன வெளிவிவகார அமைச்சர்- பிரதமர் சந்திப்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More

ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்

சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகப் புகழ்பெற்ற இந்திய இஸ்லாமிய பரப்புரையாளர் மருத்துவர். ஜாகிர் நாயக்கை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் மத்திய அரசு வெளியிட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக எமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். மும்பையைச் சேர்ந்த மருத்துவரும், இஸ்லாமிய அறிஞருமான ஜாகிர் நாயக், இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களின் வேத நூற்களையும், கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றவர். சமயக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் ஒருமைப்பாட்டை, நுண்மான் நுழைபுலத்தோடு…

Read More