Main News
நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு!
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பங்களாதேஷ்க்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், அவ் விஜயத்தினை முடித்துக் கொண்டு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான இவரது விஜயத்தின் போது இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இவருடன் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மன் பிரீட் சிங் ஆனந்தும் வருகை தரவுள்ளார். பங்களாதேஷுக்கான இவரது விஜயத்தில், பங்களாதேஷ் அரசுக்கான அமெரிக்காவின் ஆதரவு, வன்முறைக்கு…
பஸ் டிப்போ ஊழியர்கள் சம்பள நிலுவை வழங்கக்கோரி போராட்டம்!
இரத்தினபுரி பஸ் டிப்போ ஊழியர்கள் இரு மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி 440 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வற் வரிக்கு இடைக்கால தடை
பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டொம் மாலினோவஸ்கி விரைவில் இலங்கை வருகை
ஜனநாயகம் , தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொம் மலினோவஸ்கி இம்மாதம் 12 தொடக்கம் 20 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் இலங்கையின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு சிவில் சுமூகத்தினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளின் போது நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் அதேவேளை இந்த செயற்பாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் கைது!
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘சிறையில் நான் இங்குதான் இருந்தேனா’ (Video)
1971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில் தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலை கூண்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (10) பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோ…
சில எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
எரிபொருள் வகைகளில் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனியவள மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய எரிபொருள் நிறுவனங்களினால், Xtra Premium Euro3 மற்றும் Extra Mile ஆகிய எரிபொருட்களின் உற்பத்தி விலைகள் 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை டிசம்பர் 14 இல்
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவினை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் பிறப்பித்துள்ளார். எந்தவொரு சரியான ஆதாரங்களும் இன்றி தான் கைதுசெய்யப்பட்டமை தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்தும், அதற்கான நஷ்டஈட்டினை வழங்கக்கோரியும் அடிப்படை உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றத்தில் கம்மன்பில தாக்கல்…
அமைச்சர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதி
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை பிரதியமைச்சர் நிமல் லன்சா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தான் 85 இலட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வி8 வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக நிமல் தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய சொந்த பணத்தில் டொயோட்டா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தலதா அத்துகோரள தெரிவித்தார். இவை,…
‘ஜி.எஸ்.பி பிளஸ் நிபந்தனைகள் குறைப்பு’
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், 16 நிபந்தனைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வதால், இலங்கைக்குச் சாதகமான பல நன்மைகளை எதிர்பார்க்க முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இந்த வரிச்சலுகை மீளவும் கிடைக்குமா, இல்லையா என்பது தொடர்பில், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை…
நிழல் அமைச்சரவை: ‘வார்த்தை தவறியது’
ஒன்றிணைந்த எதிரணியின் நிழல் அமைச்சரவையானது, தவறான வார்த்தைப் பிரயோகத்தாலேயே பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, அந்த அமைச்சரவையின் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகியதும் அமைச்சரவையும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார். வென்னப்புவ, சிறிகம்பளை போதிருக்காராம விகாரையில் , சனிக்கிழமை இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய மஹிந்த, மேற்படி நிழல் அமைச்சரவை தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,…
ஷாகிர் நாயக்கிற்கு எதிராக குதித்துள்ள தஸ்லிமா நஸ்ரின்
வங்காளதேசம் ’பீஸ் டிவி’க்கு தடை விதித்து உள்ளநிலையில், அந்நாட்டில் அமைதி நிலவும் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார். 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. இந்தியா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் இதுதொடர்பான ஆய்வை…
