Main News
மீரிகம புகையிரத விபத்து : இருவர் காயம்
வில்வத்த மீரிகம பகுதியில் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பின்னால் புகையிரத இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தினால் மீரிகம அம்பேபுஸ்ஸ பகுதிகளுக்கான புகையிரத போக்குவரத்து தாமதப்பட்டுள்ளதாக புகையிரத சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னையும் எனது குடும்பத்தையும் சிறையடையுங்கள்
என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக செயற்படுவேன் : இந்திரஜித் குமாரசுவாமி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு 3000 வைத்தியர்கள் தேவை
நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு; இன்னும் மூவாயிரம் வைத்தியர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆயினும் ஒரு வருடத்தில் ஆயிரம் வைத்தியர்கள்தான் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்களுள் 250இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இப்பிரச்சினை இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் தீர்க்கப்படும் என சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார். மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு அண்மையில் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட சுகாதார பிரதி அமைச்சர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:…
அடையாளம் காட்ட உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை
சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவரின் மாதிரி வரைபடங்களை பொலிஸ் தலைமையலுவலகம் வெளியிட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப்…
எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை ஜீலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. இன்று (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பைரூஸ் ஹாஜி விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து
பொறுமை,தியாகத்துடனான அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இன ஐக்கியத்துடன் கூடிய ஆத்மார்த்த நட்பு, சமூக ஒத்துழைப்பு வளர்ச்சி கண்டு, நாட்டின் சுபீட்சம் மேலும் அபிவிருத்தியடைந்து, எமது தாய்திருநாட்டில் முஸ்லிம் மக்களுக்கெதிரான சதிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டு, அவை முற்றாக இல்லாதொழிந்து அனைத்து இன மக்களினதும் தனித்துவம் பேணப்பட்டு,உடன்பாடான மாற்றங்களுடன் இலங்கையர் அனைவரும் அச்சமின்ற,மனச்சஞ்சலமின்றி சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்ற துஆவினை வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன். அத்தோடு எல்லாம் வல்ல அல்லாஹ் ஏதோ ஒரு வழியில் எங்களுக்கு தந்துள்ளதனை வைத்து நாங்கள் நோன்புகளை நோற்று…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ 90-100 ரூபா வரையிலும், தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 120 முதல் 145 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. சீனியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. ஒரு கிலோ சீனியின்…
மன்னார் உப்புக்குளம் மைதானத்தை புனரமைக்க நிதியுதவி
‘இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி’ என்னும் தொனிப்பொருளை மையமாக வைத்து வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மன்னார் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் தனது நிதியில் இருந்து மன்னார் உப்புக்குளம் அல் பதா விளையாட்டு மைதான புனரமைப்புக்காக 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை இன்று திங்கட்கிழமை அல் பதா விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் தனது அலுவலகத்தில் வைத்து கையளித்தார். மேலும்…
மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமனம்
பிரபல சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (04/07/2016) கைத்தொழில்,வர்த்தக அமைச்சு அலுவலகத்தில் வைத்து கையளித்தார். சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அனுராதபுர மாவட்டம் கனேவல்பொலவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார். கொழும்பு, பல்கலைக்கழக சட்ட முதுமாணித்துறை…
இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் – அமைச்சர் றிஷாத்
இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் புல்லட் சார்சென்பயர் (Bulat Sarsenbayer) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (04/07/2016) சந்தித்து இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக உறவுகள் தொடர்பில் பேச்சு நடத்தினார். அடுத்த வருடம் 2017 இல் கஸகஸ்தானில் நடைபெறவுள்ள எக்ஸ்போ காண்காட்சிக்கான அழைப்பை அமைச்சர் றிசாத்திடம் அவர் விடுத்தார்.
