Headlines

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக C.I.D யில் முறைப்பாடு

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக நேற்று (21.11.216) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் C.I.D யில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எம்.இம்ளாரும் (ராஜா) இணைந்திருந்தார்.  C.I.D யில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபரிடம் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் நேற்று இரவே கையளிக்கப்பட்டது.

Read More

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தலைமையுடன்,இணைத்தலைவர்களான முதலமைச்சர் CV விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுத்தீன், பா.டெனீஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற போது.

Read More

இனக்கலவரத்தைத் தூண்ட – இனவாதிகளின்  தூபமிடும் சதி; அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது வீண்பழி!

21.11.2016 இலங்கை முஸ்லீம்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் குரல் கொடுத்து வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது கற்பனைக்கே எட்டாத வீண் பழிகளைச் சுமத்தி, பேரினவாதிகளால் தீவிரவாதி எனப் பெயரிடப்பட்டு நாட்டில் இனக்கலவரம் ஒன்றைத் தூண்டுவதற்கு சதிகாரர்களின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்அப் இல் பதிவேற்றப்பட்டுள்ள பதிவையும் அதன் தமிழாக்கத்தையும் கீழே தருகின்றேம். இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தளத்தில் வெளிவந்த அபாண்டமான செய்தியில் கண்டியில் 19 ஆம் திகதி நடைபெறும் பொதுபல சேனாவின் ஊர்வலத்தில்…

Read More

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் – அமைச்சர் றிஷாத்

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு மன்னார் மாவட்ட கல்வித்திணைக்களத்தின் பரிபாலனத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி; வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் வட மாகாணசபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாட்…

Read More

புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் விரையில் பூர்த்தி – றிப்கான் பதியுதீன்

புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் மிக விரைவில் நிறைவேற்றுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். பாலர் பாடசாலை ஆசிரியர்களால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மன்னாரிலிருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக வெளியேறிய முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் கிராமமான புத்தளம் கரம்பை கிராமம் உள்ளது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் இப்பகுதியில் உள்ள முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படவுள்ளன.என்னையும் எனது கட்சியையும்…

Read More

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான பெஷன் பக் ஊழியர் ; அமைச்சர் றிஷாத் நேரில் சென்று நலம் விசாரிப்பு …

பெஷன் பக் நிறுவனத்தில் நேற்று முன்தினம்  தீ விபத்து ஏற்பட்டுள்ளபோது அங்கிருந்த பாதூகாப்பு கமராவை பொலிஸார் பலவந்தமாக பெற்றுச்சென்றுள்ள  சந்தர்ப்பத்தில் பெஷன் பக் நிர்வாகத்தினர் மற்றும்  பொலிஸார் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதன்போது பாதூகாப்பு கமரா தொகுதியை வழங்க மறுத்த பெஷன் பக் ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த ஊழியர் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று மாலை அமைச்சர் ரிஷாத் மற்றும் அமைச்சர் பைஸர் ஆகியோர் குறித்த ஊழியரை…

Read More

இனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம்

முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அட்டூழியங்கள், அராஜகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கரம்பை சபா-மர்வா கிராமங்களுக்கான புதிய பாதை திறப்பு விழாவும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக பங்கேற்று அமைச்சர் உரையாற்றிய போதே இந்தத் தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த…

Read More

தாக்குதலுக்குள்ளான Fashionbug தலைமைக்காரியாலையத்துக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

தாக்குதலுக்குள்ளான Fashion bug தலைமைக்காரியாலையத்துக்கு நேற்று (20) அமைச்சர் றிஷாத் விஜயம் செய்ததுடன், இடம் பெற்ற சம்பவத்தையும் கேட்டறிருந்துகொண்டபோது.

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்தின் அனல்பறக்கும் பேச்சு! (வீடியோ)

”இந்த நாட்டில் உள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது இஸ்லாமியர்களோ உலக பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படுகின்ற ISIS அமைப்பிற்கு ஆதரவாளர்களாக மாறமாட்டார்கள் என்ற உறுதி மொழியை நான் தருகின்றேன்” என பாராளுமன்றத்தில்  பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

இனவாதத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரவும் – அமைச்சர் றிஷாத்

நாட்டில் பல்வேறு வழிகளில் இனவாத செயற்பாடுகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயத் தலைவர்கள் இனவாத்தை தூண்டும் வகையில் செய்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள சமாதானத்தை குழப்பும் வகையில்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் பெயரைப்பயன்படுத்தி கண்டி ஊர்வலத்திற்கு ஆட்சேர்க்க நடவடிக்கை

அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிர,ஸ் தொலைத்தொடர்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இன்று மாலை முறைப்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் சட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். ’அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வில்பத்தை அழிக்கின்றார்’ என கடும்போக்காளர்கள் முன்வைத்த மோசமான திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில்…

Read More