Headlines

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கல்லூரின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்களும் பழைய மாணவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி கட்சி இணைப்பாளர்களான அலி சப்ரி, எஹ்யா ஆப்தீன் பாடசாலை அதிபர் ,ஆசியர்கள்,பெற்றோர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Read More

வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் பாயிஸ் அவர்களின் நிதியொதிக்கீட்டில் வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன்  அண்மையில் கலந்துகொண்டபோது.

Read More

புத்தளத் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை – அமைச்சர் றிஷாத்

புத்தளம் தொகுதியில் தான் தேர்தலில் குதிப்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியலை புத்தளத்தின் மைந்தன் நவவிக்கு வழங்கியதாக பரப்பப்பட்டுவரும் விஷமத்தனமான பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் உயிருள்ளவரை புத்தளத் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் கலந்து கொண்டு உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் தொழில் அதிபருமான அலி…

Read More

கட்டுக்கடங்காதவர்களுடன் பேசிப்பயனில்லை!

இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் நல்லாடசி மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடமிருந்து அற்றுப்போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேத்ரா தொலைக்காட்சியில் அதன் நடப்பு விவகார பணிப்பாளர் யூ.எல்.யாக்கூபினால் நெறிப்படுத்தப்பட்ட வெளிச்சம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் சிறுபான்மை மக்களின் மன எழுச்சி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக தேசிய முன்னனியின் தலைவர் அமைச்சர் மனோ…

Read More

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்

தலைமன்னார் நடுக்குடாவில் பனை மரத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபாகரணங்கள் கையளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” எமது மன்னார் மாவட்டமானது உண்மையில் வளம் நிறைந்த ஒரு மாவட்டம் அந்தவகையில் பனை உற்பத்தியும் அதிலடங்குகிறது ஆனால் எமது மக்கள்…

Read More

மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின்  நிதி ஒதுக்கீட்டில், மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு இன்று  25.11.2016 திகதி பி.ப.3.30 மணிக்கு மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி வைக்கவுள்ளார். மேலும், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸ் திட்டப்பணிப்பாளர் செழியன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும்…

Read More

“புத்தளமே விழித்தெழு” அ.இ.ம.கா.வின் மாபெரும் நிகழ்வுகள்

வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீனின்வழிகாட்டலில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன . இதற்கான நெறிப்படுத்தலை புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான அல்ஹாஜ் M.H.M. நவவி  ,  A.R.M.அலி சப்ரி  , முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான S. ஆப்தீன் எஹியா ஆகியோர் ஒழுங்கு படுத்தி உள்ளனர் . ”புத்தளமே விழித்தெழு” எனும் தாரக மந்திரத்தோடு இடம்பெறும் இந்த நிகழ்வு காலை…

Read More

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்றுகூடல்

தற்போதைய நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஒரே அமைப்பாக செயற்பட மிகவும் உச்சாகத்துடன் முன்வந்துள்ள ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.11.2016) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.    ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சுவிஸ்,நோர்வே, சுவீடன் ,ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஒன்றுகூடலில்…

Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வு வரவேண்டுமென விரும்புபவர்கள் மற்றைய சிறுபான்மை சமூகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டுமென்று குரல் கொடுப்பவர்கள் இன்னுமொரு சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் விதத்தில் செயற்படக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினரொருவர் எப்போதுமே எந்த விடயத்தையும் வேற்றுக்கண்ணோட்டத்துடன் நோக்கி இனவாதமாகப் பேசுவதையே தமது தொழிலாகக் கொண்டு நடந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றில் இன்று (24) தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நிருவாகத்தின் கீழான அமைச்சுக்கள், கமத்தொழில் அமைச்சுக்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில்…

Read More

தேசியக் கூட்டுறவுக் கொள்கை அமைப்பது தொடர்பான பயிற்சிச் செயலமர்வு: அமைச்சர் றிஷாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இன்று (24) காலை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், கூட்டுறவு சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டனர். தேசிய…

Read More