Main News
வரவு செலவு திட்ட உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில்….. (வீடியோ)
2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றும்போது.
கல்வி அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுகுழு நிலை விவாதத்தில்…. (வீடியோ)
கல்வி அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுகுழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது.
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் அதிரடி மறுப்பு
24.11.216 கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள – முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும், சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்…
சதி முயற்சியினால் இடைநிறுத்தப்பட்ட இலவன்குளப்பாதையை புனரமைத்து மீண்டும் திறந்து விடுங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை
சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் – சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் மக்களின் பயணத்தை இலகுபடுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (23) மாலை பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, மகிந்த சமரசிங்க ஆகியோரின் அமைச்சின் கீழான குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றும் போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார். இலவன்குளப்பாதையை புனரமைப்பதன் மூலம் சுமார் 120கி. மீற்றர் பயணத்தூரத்தில்…
சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு இஸ்ஹாக் ரஹுமான் MP உதவி
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் 2016/05/03 ஆம் திகதி ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்ட காகமயை சேர்ந்த K.G. சிரியானி நந்தனி என்பவரின் வீட்டிற்கான கூரைத்தகடுகள் வழங்கியபோது.
பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் பாராளுமன்ற உரை
22.11.2016 நேற்று பாராளுமன்றத்தில் கிராமியபொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கல்வி தொடர்பாக உரையாற்றினார்.
ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி
கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெற்ற ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு ஓமான் நாட்டின் தூதுவர் ஹம்தான் ஹஸன் அவர்களை சந்தித்தார்.
குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் தொகுப்பு
Ø புத்தளம் மற்றும் பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயங்கள் Ø புத்தளத்திற்கான வயம்ப அமைச்சின் அபிவிருத்திகள் Ø மௌலவி ஆசிரிய நியமனங்கள்…….உள்ளிட்ட கோரிக்கைகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் முதலில் இந்த பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சினதும்,மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சினதும் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற கிடைத்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதே போல் வயம்ப அபிவிருத்திக்கான அமைச்சராக அனுபவமும்,நேர்மையும் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான கௌரவ எஸ்.பீ.நாவின்ன அவர்கள் நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்பதை இந்த உரையின்…
மன்னார் மீனவ சங்கங்களின் அனுமதி பெறாமல் தென்னிலங்கை மீனவர்கள் மன்னார்கடலில் தொழிலை மேற்கொள்ள முடியாது
மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு கடற்றொழிற் திணைக்களப்பணிப்பாளர் தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறச் செய்வதெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் ஏகமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது….
மன்னாரில் மண் அகழ்வுக்கு தனியாருக்கு தடை: அபிவிருத்திக் குழு அங்கீகாரம்
இந்த வருடம் டிசம்பர் 31இற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) வழங்குவதில்லையெனவும் மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அந்தப் பிரிவிலுள்ள பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்படும் ஒன்றியத்தின் வழியாக அவசியத் தேவையானவர்களுக்கு மாத்திரமே பெர்மிட்களை வழங்குவதெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கூட்டாக விடுத்த அறிவிப்பை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மண் அகழ்வினால் அந்தப்பிரதேசம் பாதிக்கப்படாத…
