Headlines

விபத்துக்குள்ளான சிறுமியை பார்வையிட்ட றிப்கான் பதியுதீன் (வீடியோ)





வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் காரியாலயத்தின் முன்னாள் இடம்பெற்ற விபத்தின் வீடியோ சமூக வலைகளில் வைரலாகி நேற்று பலரும் பார்த்த நிலையில்,இவ் விபத்தில் காயமுற்ற சிறுமி ப்ரியா தற்போது வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய ப்ரியாவை நேற்றையதினம் (19) றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளதுடன் அவருக்கான மருத்துவ செலவினையும் வழங்கிவைத்தார்.

இதன்போது மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களிடம் நன்றி தெரிவித்த சிறுமியின் தாய் தன குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்

மேலும் சிறுமியின் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *