Main News
பிரதி அமைச்சர் அமீர் அலியினால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் தலைமையில் 17.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி , பட்டிபளை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 194 விவசாயிகளுக்கு உபகரணங்கள்…
“யுத்தத்தால் பாதிப்புற்ற பிரதேசத்தை இன, மத பேதமின்றி கட்டியெழுப்ப முன் வாருங்கள்” – அமைச்சர் றிஷாத்
யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வவுனியாவில் நேற்றுக் காலை (16) இடம்பெற்ற நவீன பேரூந்து நிலைய அங்குரார்ப்பண விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதம அதிதியாக பங்கேற்ற இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாட்டுடன் பிரதிப்போக்குவரத்து அமைச்சர்…
பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் களுதாவளை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் 17.01.2016ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் சீவல்தொழில் ஈடுபடுவோருக்கு 8.00 பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதபோன்று களுதாவளை மகளிர் சங்கதினருக்கு 3லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகர் கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின்…
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு
16.12.2017 நேற்று அமைச்சர் ரிஷாத் மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், இணைப்புச் செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து நிலையத்தின் திறப்புவிழா (வீடியோ)
வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து நிலையத்தின் திறப்புவிழா (வீடியோ)
மன்னார்: வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம்
-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் பங்களிப்புடன் இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவினால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு வருகைத்தந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்படுவதையும்,கலந்து கொண்ட அணியினரையும்,வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்…
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை
வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் திறந்து வைப்பு
வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டீ சில்வா தலைமையில் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் றிஷாத் பதியுதீன், போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேயசிங்க, வட மாகாண ஆளுனர் றெஜினோல் குரே, வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் ப டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் வீ ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்…
புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி
புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று அண்மையில்புலிச்சாக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்குடா தொகுதிக்கு 100 மில்லயன் ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள் (வீடியோ)
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வீடியோ அமீர் அலியினால் அபிவிருத்தி அடையும் கல்குடா:- கல்குடா பிரதேசத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீடுகளில் இருந்தும் கிராமிய பொருளாதார அமைச்சிலிருந்தும் மீள் குடியேற்ற அமைச்சிலிருந்தும் பிரதமருடைய பொருளாதார திட்டமிடல் அமைச்சிலிருந்தும் மொத்தமாக 100மில்லியன் ரூபாய்கள் செலவில் கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களினுடைய திறப்பு விழா நிகழ்வுகளில் கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக…
“மக்களின் நிலைப்பாட்டினை அறிந்து செயற்படுபவர்களாக அரச அதிகாரிகள் மாற வேண்டும்” அமைச்சர் றிஷாத் (வீடியோ)
அரச அதிகாரிகள், உதவிகளுக்காக தங்களை நாடி வரும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அரச திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், மலர்ந்திருக்கின்ற இந்த சமாதானத்திலே இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்….
தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி 5 கோடி 88 இலட்சம் ஒதுக்கீடு
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் ஊடாக மேற்படி பாடசாலையில் ஆராதனை மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான 5கோடி 88 லட்சம் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தினை நேற்று முன்தினம் 12.01.2017 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் அவர்களிடம் பிரதி அமைச்சர் கையளித்தார்.
