Headlines

மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடதிறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.




மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் சரீபுதீன் தலைமையில்  இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட  நிறுவனத்தின் அதிகாரி நுஹ்மான், மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செபஸ்டியன், கிரபைட் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அலிகான் ஷரீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *