Main News
ஆறு நாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி டிசம்பர் 31 க்குள் கொழும்பு வந்து சேருகின்றது.
அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, அவசரமாக மேலும் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை உள்ளடக்கிய விஷேட கேள்விப்பத்திர சபை, அரிசிக்கான சர்வதேச…
இனங்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக் கூடாது. வவுனியாவில் அமைச்சர் றிஷாத்
.இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று காலை (22.10.2017)இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார். நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா ஓவியா ஹோட்டலில் இடம் பெற்ற இந்த…
பிபில முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யுங்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் வலியுறுத்து.
பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்து அங்குள்ள வர்த்தகர்களை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் சுமுக வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஊவா மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரேம சாந்த அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த விதமான காரணங்களுமின்றி கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர்களின் செயல்கள் மேலும் எல்லை மீறி இன…
வடக்குமுஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை வைத்து அரங்கேற்றப்படும் நாடகத்தின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்த உதவுங்கள். ஜனாதிபதி பிரதமரின் முன்னிலையில் றிஷாத் கோரிக்கை.
வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று காலை (21.10.2017) இடம் பெற்ற “நிலமெஹவர” ஜனாதிபதி நடமாடும் சேவையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சர் இந்த கோரிக்கையை…
“முஸ்லிம் சமூகம் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” ஐ.நா விஷேட அறிக்கையாளரிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ. நா விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா விஷேட அறிக்கையாளரை இன்று காலை (20/ 10/ 2017) கொழும்பில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, அமைச்சர்…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் புதிய உள்ளுராட்சி புதியசபைகள் உருவாக்கமும் , நகர மற்றும் மாநகர சபைகளாக தரமுயர்த்தும் மும்மொழிவுகள் கையளிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் புதிய உள்ளுராட்சி புதியசபைகள் உருவாக்கமும் , நகர மற்றும் மாநகர சபைகளாக தரமுயர்த்தும் மும்மொழிவுகள் கையளிப்பு. திருகோணமலை மாவட்டத்தில் புதிய தோப்பூர் , புல்மோட்டை , கச்சகொடிதீவு , முள்ளிபோதனை , சம்பூர், வானெல, குடாக்கரை பிரதேச சபைகள் உருவாக்குவதற்கும். கிண்ணியா நகரசபைக்கு , கிண்ணியா பிரதேச சபைலிருந்து உப்பாறு கிழக்கு பகுதியை இணைப்பதற்கும் மூதூர் கந்தளாய் பிரதேச சபைகளை நகரசபைகளாகவும் , திருகோணமலை நகரசபையை மாநகர சபையாகவும் தரமுயர்த்துவதட்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்…
பாராளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி யின் தலைமையில் புத்தளம் அக்கரைப்பற்று பகுதியில் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான M.H.M.நவவி அவர்களால் அக்கரைப்பற்று பகுதிக்குள் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம் செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது . பாராளுமன்ற உறுப்பினரின் விசேட நிதியூடாக பரிசாதி தோட்டத்திலிருந்து பாலச்சோலையை இணைக்கும் வீதிக்கான செயல் திட்டத்திற்கு 1 கோடி 34 இலட்சத்திற்கு ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதே போன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதமர் ஊடாக கிடைத்த இரண்டு கோடி விசேட நிதியில் ரெட்பானா பாதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 இலட்சத்திற்கான…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி உதவியில் மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசால் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி உதவியில் (15 லட்சம் ரூபா) மன்னார் உப்புக்குளம் பெரியபள்ளியின் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து யைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினர் நகுசீன் மன்னார் மாவட்ட மீள் குடியேற்ற செயலணியின் இணைப்பாளர் முஜீப் மற்றும் உப்புக்குள பள்ளித்தலைவர் ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
அரிசியின் விலை மேலும் குறைகின்றது. சதொச அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலையேற்றம் காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாடு பூராகவுமுள்ள 370 சதொச நிறுவனத்தினூடாக சாதாரண விலையில் அரிசி உட்பட அத்தியாவசிப் பொருட்களை நியாயமான விலையில சதொச நிறுவனம் வழங்கி வருகின்றது. நுகர்வோரின் நன்மை கருதி இன்று நள்ளிறவு முதல் (19) மீண்டும் அரிசியின் விலையை குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் தெரிவித்தார். இன்று (19) வொக்ஸ்வல் வீதியில்…
தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தவரு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
அரிசிக்காக, ஒருமாத மின்சார மற்றும் தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தான்சார்ந்த செய்யப்படுகின்ற அரசியல் துரோகம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அஸ்ஙர் வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வட்டார ரீதியில்…
மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமிர் அலி
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் துறை மையங்கள் உல்லாசப் பயணிகளை மையப்படுத்திய வேலைத் திட்டங்களாக கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தேசிய அருங்கலை பேரவையின் பேத்தாளை கருங்காலிச்சோலை மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்பு விழாவும், உபகரணம் வழங்கும் நிகழ்வும் உற்பத்தி நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் தேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- உலகத்திலே மிகவும்…
இலங்கையின் தொழில் முயற்சியாண்மை பொருளாதரா மறுசீரமைப்பில் பாரிய பங்களிப்பை நல்கும்… அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
