Main News
சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு பாரிய நிதியுதவி.. அமைச்சர் ரிஷாட் புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்..
தயாரிப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளில் ஈடுபடும் 5000 க்கு மேற்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு பாரியளவிலான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சு நடைமுறைப்படுத்துகின்றது. 09 வர்த்தக வங்கிகள் அடங்கலான 11 முன்னணி நிதி நிறுவனங்களின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது. “சிறிய மற்றும் நுண் கைத்தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பல உற்பத்தி நிறுவனங்கள் போதுமான அளவு நிதியைப் பெறுவதில்லை. இதனாலேயே அந்த தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்களால் சூழல் அதிகளவில் மாசடைகின்றது. இதனைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்…
விதவைகளுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில், இளம் பெண்களுக்கான முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில், கணவரை இழந்த விதவை பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்துக்கமைய, சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,கொழும்பில் இன்று (06/ 12/ 2017 ) இடம்பெற்றது.
முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளின் கலை கலாசார நிகழ்வில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!
முள்ளிப்பொத்தானையில் உள்ள 05 முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை, கலாசார நிகழ்வு, முள்ளிப்பொத்தானை, அல்/ஹிஜ்ரா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த திங்கட்கிழமை (04/12/2017) அன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக தம்பலகாமம் பிரதேச செயலக…
இலங்கையின் சுதந்திர தொழிற்பாட்டு நடவடிக்கையை உலகின் மிகப்பெரிய கடற்போக்குவரத்து ஜாம்பவான் ஆதரிக்கிறது!
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கடற் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் இலங்கை அதன் கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட எடுத்த முடிவை ஆதரிக்கிறது. இந்த கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட முன்மொழியப்பட்ட 2018 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட ஆலோசனை மிகவும் முன்னேற்றகரமானது என இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் உடைய சிரேஷ்ட தெற்காசிய பணிப்பாளர் ஜூலியன் மைக்கல் பெவிஸ். டென்மார்கின்…
தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு முல்லையில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க ரிஷாட் நடவடிக்கை
முல்லைத்தீவில் மீள்குடியேறி, வீடில்லாமலும், காணிகள் இல்லாமலும் கஷ்டப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால், துபாய் அரசின் நிதியுதவியுடன், 120 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் தலைமையில், முல்லைத்தீவு ஹிஜ்றாபுரத்தில், கடந்த திங்கட்கிழமை (03) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த மே மாதம் ஐக்கிய அரபு…
பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வொன்று,கடந்த 25 புத்தளம் அநுராதபுர வீதியில் அமைந்துள்ள, கால்டன் வீவ் ரிஷப்சன் மண்டபத்தில் நடைபெற்றது. 2017/2018 கல்வியாண்டுக்கான ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்குமான அறிமுக செயலமர்வாகவும், கௌரவிப்பு நிகழ்வாகவும் புத்தளம் மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படுள்ளது. குறித்த நிகழ்வானது பல்கலைக்கழக சூழல் பற்றிய பூரண அறிவை மாணவர்களுக்கு வழங்கியதோடு, பல்கலைக்கழக ஆன்மீக விடயங்களைப் பேணுதல்…
அத்தியாவசிய பொருட்களுக்கான நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை!
அத்தியாவசிய பொருட்களான தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. இதன்படி தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோகிராம் 130 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, இந்த உணவு பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (06)…
மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகள் டாக்டர். ஹஸ்மியா தெரிவிப்பு
பெண்களின் நலன்களைக் காத்து அவர்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய வகையில், பல்வேறு திட்டங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாகவும், இந்த வகையில் முன்பள்ளிகளை அபிவிருத்திச் செய்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கும் புதிய திட்டத்தை, தமது கட்சி செயற்படுத்தி வருவதாகவும், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலையத்துக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்வு, மருதமுனை அமைப்பாளர் சித்தீக் நதீரின் ஆலோசனையில் மருதமுனை…
“அரசியலிலிருந்து ஒதுங்கிவிட எண்ணிய எனக்கு, புதிய தெம்பு கிடைத்திருக்கின்றது” முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹம்ஜாட் தெரிவிப்பு!
அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவோமா என்ற சலிப்புடன் இருந்த எனக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மக்கள் சேவைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், மீண்டும் அரசியலில் நாட்டம் ஏற்பட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட் தெரிவித்தார். கண்டி உடதலவின்னவில் நேற்று முன்தினம் (04/ 12/ 2017) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, கண்டி மாவட்டத்தில் பேரினவாதக் கட்சிகளில்…
கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல்.. ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு.
கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் பத்துலட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களின் கைத்தொழில் துறையை ஊக்குவித்தலும் பொதியிடல் துறை விருத்தி செய்தலும் என்ற கருப்பொருளிலான அதிகாரசபையின் திட்ட்த்துக்கு இணங்க அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூட்த்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். கைத்தொழில்…
இலங்கையுடனான வர்த்தகத்தில் வளைகுடா நாடுகள் ஆர்வம்’ ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு
இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமிட் அப்துல் பத்தா காசிம் அல் – முல்லா தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் 76வது தேசிய தின விழா கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் இடம்பெற்ற போது, தூதுவர்; இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த விழாவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…
தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை. அமைச்சர் ரிஷாட் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு தக்க பலன்..
தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், சமாதான சூழ்நிலையில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்களுக்கான காணி உரிமங்களை வழங்குமாறு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த தொடர்ச்சியான எழுத்துமூல கோரிக்கைகள், சந்திப்புக்கள்…
