Headlines

ஹிருணிகாவுக்கு பிணை!

தெமட்டகொட பகுதியில் நபர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானதென கூறப்படும் டிபென்டர் வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Read More

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்லப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், உமா ஓயாத் திட்டத்தின் விளைவாகத் தமக்கான நீரைத் தாம் இழப்பதாகத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று புதன்கிழமை (21) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

Read More

சோகமயமான கல்குடா – தாய் தந்தை உள்ளிட்ட நால்வரின் சடலம் நல்லடக்கம்

கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது. இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் ஆயிரக்காணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றன. நேற்று முன்தினம் கல்குடா கடலில் குளிக்கச்சென்று நேற்று காணாமற்போன, 18 மற்றும் 21 வயதான சகோதரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்நிலையில், கடலில் மூழ்கி பிள்ளைகள் இருவர் உயிரிழக்க, அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை…

Read More

சிறைக்கூண்டுகளுக்கு சி.சி.டி.வி கமெரா

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் மற்றும் வேறு சில சம்பவங்களையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்படவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பு, நேற்றுத் திங்கட்கிழமை (19) அறிவித்துள்ளது. இவ்வாறு அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்துவதன் மூலம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நடவடிக்கை குறித்து பொலிஸாரால் அவதானமாக இருக்க முடியும் என்று குறித்த அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறைக்கூண்டுக்குள்ளேயே பொருத்தப்படல்…

Read More

தேரர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரர் மீதான வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன ஒத்திவைத்துள்ளார். குறித்த உத்தரவு இன்று (20) பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சஜின் வாஸூக்கு பிணை

மிஹின் லங்கா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலில் 833 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவினால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர், இரண்டறை இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் முன்னிலையில், இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு…

Read More

இலங்கையில் கால் பதிக்கும் பஜாஜ் நிறுவனம்

இந்தியாவின் இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனமான பஜாஜ்  எலெக்ரிக்கல்ஸ் நிறுவனம் தரமான தனது இலத்திரனியல் சாதனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது. இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் பாரிய சேவையாற்றும் பஜாஜ் நிறுவனம், இலங்கையில் இரு வர்த்தக நிறுவனங்ளை தனது ஏக விநியோகஸ்தர்களாக நியமித்துள்ளது. சுமாராக 300 வர்த்தகர்களை தமது அறிமுக உற்பத்திப் பொருட்களை நேரில் பார்வையிடும்படி குறித்த இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பொருட்களின் தரம் மட்டுமல்ல, அனுபவஸ்தரான பாவனையாளரின் கையிலும் அது இருந்தால்தான்…

Read More

பாடசாலையில் தீ!

ஹாலிஎல – ஊவா பாடசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கல்விசாரா ஊழியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்த வேலைகள் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை தீ கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

லேக்ஹவுஸ் ஊழியர்கள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் சிலர் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

இலங்கையை அச்சுறுத்தும் அடையாளப்படுத்தப்படாத நோய்!

இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய இரு தாய்மார் உயிரிழந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சிலாபம் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறான நோய் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது….

Read More

4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கொள்ளை

புறக்கோட்டையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட நான்கு பேரே இவ்வாறு திருடிச் சென்றுள்ளனர். அங்கு வேலை செய்தவர்களின் கைகளுக்கு போலியான முறையில் கைவிலங்கிட்டு, தங்கத்தை அபகரித்து சென்றுள்ளனர். அவ்வாறு அபகரித்தவர்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி…

Read More

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு : மேலும் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் நுகேகொடை பிரதேசத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், துமிந்த சில்வாவின் தலையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளை…

Read More