Headlines

போலி கச்சேரியை சுற்றிவளைப்பு

மாத்தறை கொப்பராவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திவரப்பட்டபோலி கச்சேரியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவரும் கைதசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்ததைச் சேர்ந்த 41 வயதாகனவர் என தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த இடத்திலிருந்து போது அடையாள அட்டைகள்,  பிறப்புச்சான்றிதல்கள் , அரச நிறுவனங்களின் முத்திரைகள் மற்றும் இதற்காக பயன்படுத்தப்பட்டகணினி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. இதில் 51.44 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதவாகியுள்ளதாக விசேட பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

எவன்கார்ட் ; இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எவன்கார்ட் விவாகரம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 5 திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காலி நீதவான் நிலுபுலி லங்காபுர  குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.  மேலும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும்  எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும்  நீதவான்  உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த…

Read More

தெற்கு அதிவேக பாதையில் பயணிகள் பஸ் விபத்து

தெற்கு அதிவேகப் பாதையில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களனிகம மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட 26வது கிலோ மீற்றர் கட்டைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாதையின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனம் ஒன்றுடன் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான பஸ் வழமையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடக் கூடியதல்ல என்றும் பொலிஸார்…

Read More

இசுறுபாயவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யத்தடை

வைத்தியர்களின் பிள்ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி

கிளிநொச்சி – இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மத்திய மாகாணத்தில் வெளி மாணவருக்கு அனுமதி மறுப்பு

மத்­திய மாகாண தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் 2017 ஆம் ஆண்டு உயர்­கல்­வியை தொடர்­வ­தற்­காக விண்­ணப்­பித்த வெளி மாகாண மாண­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், இரத்­தி­ன­புரி மாவட்ட மாண­வர்கள் பெரிதும் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளாகி இருப்­ப­தாக பெற்றோர் கவலை தெரி­விக்­கின்­றனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் உயர்­தரப் பிரி­வு­களில் கலை, வர்த்­தகப் பிரி­வுகள் மாத்­தி­ரமே போதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. விஞ்­ஞான, கணித பிரி­வு­களில் உயர்­கல்­வியைத் தொடர விரும்பும் மாண­வர்கள் மத்­திய மாகா­ணத்­திற்குச் செல்­கின்­றனர். தற்­போது, இம் மாண­வர்­க­ளுக்கு அங்கும் கத­வ­டைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதால்,…

Read More

இரண்டு சிறுவர்களை காணவில்லை ; தேடுதல் பணிகள் தீவிரம்

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் நேற்று (12) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள சிறுவர்கள் 9 மற்றும் 11 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களை தேடும் பணிகளில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்க்க அழைப்பு

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – புத்தளம் மக்களுக்கு பெருந்தொந்தரவாகவும்,பாதிப்பாகவும் அமையப்போகும் கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான அழைப்பினை கொழும்பு –புத்தளம் குப்பைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது. மேற்படி இயக்கம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள பிரசுரமொன்றின் மூலம் இந்த அழைப்பினைவிடுத்துள்ளது. – அந்த பிரசுரத்தில் தெரவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன – புத்தளம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையவுள்ள இந்த திட்டம் தொடர்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது மக்களினால் முன்னெடுக்கப்பட்ட…

Read More

தேசிய வனத்திற்குள் குப்பைக் கொட்ட முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வனத்திற்குள் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் நடவடிக்கை பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் இதன்போது மற்றுமொரு ட்ரக் வண்டியொன்றில் குப்பை கொட்டுவதற்கு வந்தவர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று பொலன்னறுவை நீதவான்…

Read More

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி பலி

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மனநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவரது இறப்பு தற்கொலையா? அல்லது தவறி விழுந்தமையினாலா என்பது தெரியவரவில்லை எனவும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் கூறியுள்ளார். மேலும், மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஏறாவூரில் தாயும் மகளும் அடித்துக் கொலை!

மட்டக்களப்பு – ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று  சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து…

Read More