மஹிந்தானந்தவுக்கு மீண்டும் அழைப்பு!
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்று வீட்டு வாசலில் இறங்க முற்பட்டவேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும்…
கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இம்புல்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
-பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2017 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி…
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இன்று முதல் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நாட்டிலுள்ள 300 க்கும் மேற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 26 பிரிவுகள் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடங்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருப்பது…
கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழக்கிழமை (22)அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராமலிங்கம் சந்திரசேகர் விலகியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்த சந்திரசேகர், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஹற்றன் நகரில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் 10 ஆவது மாநாட்டில் உரையாற்றிய சந்திரசேகர், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அரசியல்…
நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, பிரதி ஆணையாளர்களை நியமித்து சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கியமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று…
விடுமுறையைக் களிப்பதற்காக நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, நுவரெலியாவுக்கு சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தார். தனது நண்பர்கள் சிலருடன் விடுதிக்கு முன்பாக இருந்து சனிக்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்த போதே, விடுதியில் குளவி கூட்டிலிருந்த குளவிகள் திடீரென கலைந்து, கொட்டியுள்ளன. இதில் காயமடைந்த அந்த எம்.பி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
பேராதனை கலஹா வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனை கலஹா வீதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமீபமான ஹிந்தகல பிரதேசத்தில் மணல் லொறி ஒன்றுடன் இம் மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விடத்திற்கு அண்மையில் மாணவர் விடுதி ஒன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மேற்படி மாணவன்…
– சுரேன் – பூண்டுலோயா நகரில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய அம்பகஹாவத்த கெதர உதயணி என்ற பெண் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளார். பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா செல்வதற்கு பஸ்ஸில் ஏற வீதியை கடக்க முயன்ற போது தலவாக்கலையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியில் மோதியே குறித்த பெண் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பூண்டுலோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பூண்டுலோயா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு…