Headlines

இந்தியாவிற்குச் சென்று திரும்பிய இருவருக்கு மலேரியா

உலக சுகாதார அமைப்பினால் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரத்தில் தங்கல்ல-பெலியத்த பிரதேசத்தில் மலேரியா நோயாளிகள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொண்ட இருவருக்கே இந்த மலேரியா தொற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு யாத்திரை சென்ற ஆண் ஒருவருக்கும், பெண்ணொருவருக்குமே மலேரியா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வைத்து காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே இவர்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலேரியாவால் பாதிக்கப்பட்ட குறித்த இருவருடனும்…

Read More

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலி ; தாய், மகள் காயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலியானதுடன் மனைவி மற்றும் பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து லிந்துலை நாகசேனை வலஹா கொலனி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பெயார்வெல் பகுதியில் 21  அடி பள்ளத்தில் இருந்த புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தின் மீது விழுந்து…

Read More

ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழும் தேசிய கீதம் பாடப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில்  சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

Read More

ஷகீப் சுலைமான் கடத்தலில் மூளையாக செயற்பட்டவர் கைது…

பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல எவ­னி­யூவில் இருந்து கடத்தி படு­கொலை செய்­யப்­பட்ட 29 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தந்­தை­யான சகீப் சுலை­மானை கடத்தல், படு­கொலை திட்­டத்தை நெறிப்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பிர­தான சந்­தேகநபர் ஒரு­வரை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருந்த 8 சந்­தேக நபர்­க­ளுக்கு சொந்­த­மான 13 தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்தி நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யி­லேயே பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் கொலை செய்­யப்­பட்ட வர்த்­த­கரின் நம்­பிக்­கைக்­கு­ரிய சேவ­க­ரான சந்­தேக நபரின் சகோ­தர முறை­யி­லான…

Read More

கார் விபத்து : வைத்தியர் படுகாயம்

புத்தளம் குருநாகல் வீதியில் கொட்டுக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கார் ஒன்று விபத்திற்குள்ளாகியதில்  வைத்தியர் ஒருவர் படு காயமடைந்து புத்தளம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

 நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள் செயலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனடிப்படையில்,  “லிங்க்” இணையத்தளத்துக்குச் சென்று, அதிலிருக்கின்ற 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை கிளிக் செய்யவும். அதில் உள்ள கட்டங்களில், தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஒன்பது இலக்கங்களுடன் ஆங்கில எழுத்து மற்றும் நிர்வாக மாவட்டத்தைத் தட்டச்சுச் செய்யவும். உங்களுடைய தேசிய  அடையாள அட்டை இலக்கத்தை சரியாகப் பதிவு செய்தால், 12 இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை…

Read More

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது – அமைச்சர் கிரியெல்ல

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மாணவர்கள் பல்கலைக்கழகமொன்றுக்கு செல்வது கல்வி கற்பதற்காக. ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பல்கலைக்கழகத்திற்குள் சங்கங்கள் கிடையாது. எனினும் நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாத தரப்பினர் பல்கலைக்கழகங்களில் சங்கங்களை அமைத்துக்கொண்டுள்ளனர். ஒர் அரசியல் கட்சி குருணாகலில் நடைபெற்ற போராட்டத்திற்கு 50 பஸ்களை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது, இனி…

Read More

பாரத லக்ஸ்மன் கொலையின் இறுதி தீர்ப்பு – பலத்த பாதுகாப்பில் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று (6) பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை…

Read More

நாட்டில் நிலவும் நீர் தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை மாற்றங்களினால் நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்மாகாணத்திலேயே இந்த நிலைமை அதிகம் காணப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை புத்தளம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலவுவதாகவும் இதனால் தென்மாகாணத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கங்கைகளின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேசிய…

Read More

‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள், ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆசிய நாடுகளிலுள்ள மோசமான விமான நிலையங்களின் பட்டியலில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம், 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில், அமைச்சரிடம் கேட்ட போதே, அவர்…

Read More