Headlines

திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க குறிப்பிட்டார். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் 40 இற்கும் அதிகமான விசேட உயிரினங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி ஆரம்பம்!

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. 25000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வகையில் இவ்வீடுகள் கட்டும் பணி மீரியபெத்தையிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கும் ஏற்றுமதி வருமானங்களுக்கும் சிறந்த முன்னேற்றத்தினை வழங்குவது தோட்டத் தொழிலாளர்களின் அரிய பங்களிப்பாகும். அவ்வகையில் அவர்களுக்கான இவ் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதில் இந்திய அரசாங்கமும் தமது உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் சுமார் 07 பேர்ச்சஸ்…

Read More

இளகிய மனம் கொண்டவர்களே இவர்களுக்கு உதவுங்கள் !!

(16/05/2015) கணவன் மனைவி கல்வி கற்கின்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளுமாக வாழும் இந்த குடும்பமானது வருமானமே இல்லாத நிலையில் குடும்ப தலைவியின் நெல் குத்தி கிடைக்கும் சிறிய வருமானத்தினால் இந்த குடும்பம் கஸ்டத்தின் மத்தியில் செல்கின்றது. படத்தில் காணப் படுகின்ற 4 பிள்ளைகளின் தகப்பனார் தலையில் உள்ள நரம்பு பாதிக்கப் பட்டு தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சில வேளைகளில் நினைவிழந்து செயற்படுகிரார் . இதனை சரி செய்வதர்க்காக பல…

Read More

மாணவரை காணவில்லை!

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015) ஞாயிற்றுக் கிழமை முதல் காணவில்லை. இவர் குறித்த தினமன்று காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பாத நிலையில் இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப் பட்டுள்ளபோதும் இதுவரை இவர் பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இவர் இறுதியாக பச்சை நிற டிசேர்ட்டும், சாம்பல் நிற ஜேர்ஸியும் கருப்பு நிற ட்றவ்சரும் அணிந்திருந்ததாக இவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவர்…

Read More

இபாஸாவுக்கு காது கேட்க உதவுவீர்களா?

பணத்தினால் உதவ முடியாவிட்டாலும் இந்த தகவலை SHARE செய்வதன் மூலம் உதவலாமே? (16/06/2015) அஸ்ஸலாமு அலைக்கும், முகம்மது இனாயத்துல்லாஹ் இபாஸா என்னும் முஸ்லிம் மாணவி தற்போது மொறட்டுவை பல்கலைகழகத்தில் முதலாம் வருட மாணவியாக Quantity Surveying (QS) பட்ட படிப்பினை தொடர்கின்றார். இவருடைய தந்தை ஒரு கிராம சேவகர் (GS) ஆவார். தனது உயர் தர படிப்பை வெற்றிகரமாக முடித்த இவருக்கு பட்ட படிப்பை முடிப்பதற்கு முன் வல்ல இறைவனின் சோதனை அணைத்துவிட்டது. தனது இரண்டு காதுகளின்…

Read More

600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள்

அஸ்ரப் ஏ சமத் லைலா டீன் உம்மா பௌன்டேசனினால்  நோன்பு காலத்தில் தெமட்டக்கொட பிரதேசத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் பொதிகளை வழங்கும் நிகழ்வு தெமட்டக்கொட அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.  காலாநிதி  ஹாரீஸ்டீன் ஏற்பாட்டில் இப் பொதிகள் வழங்கப்பட்டன. தெமட்டக்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டாா்.  இம்முறை ஏறாவுர் போன்ற பல்வேறு இடங்களி்வல் 2000 பொதிகள் நோன்பு நோற்பதக்காக ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.

Read More

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகிலிருந்து மாணவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று தனியார் வகுப்பிற்கு சென்று  வீடு திரும்பாமையினால்  அவரது தந்தை சம்பவம் தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More

கரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பம்

ரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது. கடரையோரப் பிரதேசங்களில் நிலத்தடி நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருப்பதால் அதனை குடிநீராகப் பயன்படுத்த முடியாது மக்கள் சிரமப்படுவதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சுல்பிகர் காதர் தெரிவிக்கிறார். மன்னார் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புத்தளம் போன்ற கரையோரத்தை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலத்தடி நீரை குடிநீராகப் பயன்படுத்த…

Read More

கொழும்பில் மிதந்துவந்த மீனுடன் விளையாடிய 21 பேர், வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை கடலில் மிதந்து வந்த நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன் (நுங்கு மீன்) ஒன்றை வைத்து விளையாடிய 21 பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்தநிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான சொறி, எரிச்சல், தடிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எவரது உயிருக்கும் ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

Read More

கொரிய மொழிப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கொரிய மொழிப் பரீட்சைகள் இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளன. நான்கு மத்திய நிலையங்களில் குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அனுமதிப்பத்திரத்துடன் தெரிவு செய்யப்பட்ட மத்திய நிலையங்களுக்கு வருகை தருமாறு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

Read More

காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் வெளியீடு

அஸ்ரப் ஏ சமத் இந்திய அறிஞா் அரசியல் வாதியுமான காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்  கொண்ட  இருவெட்டு  வெளியீட்டு நிகழ்வுநேற்று  மருதானை அல் சாபா மண்டபத்தில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அஸ்லம்  ஆகியோறும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வுக்கு  இருவெட்டு தயாரிப்பாளரும் இலக்கியவாதியும் எழுத்தாளருமான தமிழ் நாடு  ஆளுா் சா நவாஸ் கலந்து கொண்டாா். சீ.டியின்…

Read More

இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வு

-ஜுனைட்.எம்.பஹ்த்- எதிர்வரும் றமழானை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்ஷாஅல்லாஹ் ஜூன் 12ம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 முதல் 8.15 மணி வரை இல77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . இந்நிகழ்வில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ‘ஆசைகள்: இளைஞர்களின் இலக்கு அல்ல!’எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் அனைத்து இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெருமாறு அழைக்கிறோம். ஏற்பாடு- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர்…

Read More