Headlines

பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாவும் ஏனைய கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிக்குமாறும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர்களின் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. tkstm

Read More

தேநீர் விஷமானதில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை – பிட்ரத்மலை தோட்டத்தில் 50 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் தேயிலை பறி;த்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று மதியம் அருந்திய தேநீர் விஷமானதினாலேயே இவர்கள் சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 10 கிலோகிராம் நிறையுடைய 5 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். tksvk

Read More

சிங்கபூரிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது

இலங்கையிலிருந்து சிங்கபூரிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்,அதன் பெறுமதி 53 இலட்சத்து 38 ஆயிரத்து 136 ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

அக்­கு­ற­ணைத்­ தொ­கு­தி­யிலே போட்டியிடுவேன் – காதர் ஹாஜி

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது ஏழை பள்­ளி­வாசல் பணி­யா­ளர்கள் போன்­றோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்தார். நேற்­றுக்­காலை கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் இவ்­வ­ருடம் ஹஜ் கோட்டா ஆகக்­கூ­டி­யது 50ஆகவும் ஆகக் குறைந்­தது 15ஆகவும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஓர் சிறந்த முறை­யாகும்….

Read More

வயது முதிர்ந்த ஆலிம்களின் விபரம் திரட்டல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழு சமய, சமூகப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து 63 வயதைத் தாண்டியுள்ள ஆலிம்களை கௌரவிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் விபரங்களைத் திரட்டி வருகின்றது. இது தொடர்பில் ஜம்இய்யா தனது மாவட்ட, பிரதேசக் கிளைகளுக்கு அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து மேற்படி உலமாக்களின் விபரங்கள் வந்துள்ள போதிலும் இன்னும் பலருடைய விபரங்கள் வர…

Read More

சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம்!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சூறாவளி நிலைகொண்டுள்ள திசையை நோக்கி காற்றலைகள் நகர்கின்றமையால் மழை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஷோபா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி இலங்கைக்கு சுமார் 2000 கிலோமீற்றர் தொலைவில் அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளது. இந்த சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த சூறாவளிக்கு அஷோபா என இலங்கையினால் பெயர் சூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

லயன் குடியிருப்பில் தீ விபத்து: உடமைகள் முற்றாக சேதம்!

க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. எனினும் இரண்டு அறைகளிலும் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டாவாறு வெளியே ஓடி வந்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில்…

Read More

காசியப்ப மன்னரின் கிரீடத்தை எடுக்கச் சென்றவர்கள் கைது

காசியப்ப மன்னரின் கிரீடம் சிகிரிய பகுதியில் புதையல் ஒன்றில் காணப்படுவதாகக் கூறப்பட்ட தகவலுக்கு அமைய, அந்த புதையலை எடுக்கச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தம்புள்ள துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களின் மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டி, தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கல்கமுவ மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். துணைப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த…

Read More

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக, உதவி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாத்துஹு, இல, 40 பஹல கொறகோய, நாவாலபிட்டியை சேர்ந்த M. C. M. Rinoos வயது 30 என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்படி கண்டி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர். இச் சத்திர சிகிச்சைக்காக சுமார் ரூபா 22 இலட்சம் செலவாகும் படி வைத்திய நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இப் பாரிய தொகையினை சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களால் திரட்ட…

Read More

வருகின்றது புதிய சட்டம்; சிம் அட்டைகளை பெற வதிவிட ஆவணம் அவசியம்

செல்லிடப் பேசி சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. செல்லிடப் பேசி சிம் அட்டைகளை போலியான முறையில் பெற்றுக்கொண்டு பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் சிம் அட்டை வழங்குவதற்கு தேசிய அடையாள அட்டையின் பிரதி மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்டு வந்தது….

Read More