ரயில் மோதி மூவர் பலி!
வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (11) காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (11) காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5-20 சதவீதமானவர்கள் உயிரிழப்பு 240,170 பேர் கலைத்துக்கொள்கின்றனர் ஊவாவிலேயே அதிகமான கருக்கலைப்பு கவிதா சுப்ரமணியம் – திருமணம் முடிக்காமலே, நாளொன்றுக்கு 1,000 பேர் சட்டவிரோதமான முறையில் கருவைக் கலைத்துக்கொள்கின்றனர் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ‘133 வருடங்களுக்கு முன்னரான சட்டத்தை, இன்னும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அச்சட்டத்தில், கர்ப்பம் தரித்த தாயொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாத்திரமே கருக்;கலைப்புச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார். கருக்கலைப்பினால் ஏற்படும்…
அக்கரபத்தனை பகுதியில் நேற்று (9) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை விஷம் கலந்த உணவை உட்கொண்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த சிறுத்தை உயிரிழந்த இடத்திற்கு அண்மையில் நாய்கள் இரண்டும் உயிரிழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கி சிறுத்தையை கொலை செய்திருக்கலாம் என திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான…
முன்னாள் பொலிஸ் அதிபரான விக்டர் பெரேராவின் வீட்டில் திருட்டு சம்வபம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு (8) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒரு மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை திருடனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அண்மையில் திடீர் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மெஜஸ்டிக் சிட்டியிற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வர்த்தகக் கட்டடத் தொகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
– பரீட் இஸ்பான் – 2016ம் ஆண்டிக்கான இஸ்லாமிய தின நிகழ்வு 2016.05.07 – 2016.05.08 ஆகிய தினங்களில் கொழும்பு பல்கலைக்கழக மஜ்லிசின் ஏற்பாட்டில் சட்ட பீட வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொழும்பில் உள்ள 25 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் பங்குபற்றின. இங்கு பேச்சசுப் போட்டி அதான் கூறல் விவாதப்போட்டி ஹஸீதா மற்றும் வினாவிடைப்போட்டி என்பன நிகழ்வை அலங்கரித்தன. அத்தோடு சில போட்டிகள் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில்…
– ஸப்ரான் .எம். மன்சூர் – திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், “புதிய திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின்…
கொழும்பு மாநகர சபையின் தற்போதையை எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகவே 1986ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த டப்ளியு. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர் 22 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், மஹாவிளாச்சி பகுதியில், மின்னல் தாக்கி யானைக்குட்டிகள் முன்று உட்பட நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த யானைகள் நான்கையும் எள்ளுப் பயிற்செய்கை நிலத்திலிருந்து, கிராமவாசிகள் மீட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஒருவரை கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இந்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பின்னர், இந்த நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்ததுடன், மீண்டும் நாடு திரும்பி புறக்கோட்டை…
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் இன்று பகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.