Headlines

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

வெள்ளத்தினால் நிரம்பியுள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை

பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது. மிக நீண்டகாலமாக மழை காலங்களில் இப்பாடசாலையில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

Read More

 நூதனசாலைக்கு முன்பாக மரமுறிந்து விழுந்தது

கொழும்பு, நூதனசாலைக்கு முன்பாக பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ள நீர் வீதியில் நிரம்பி வழிவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் வீதியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வியாபார நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பனவற்றில் வெள்ள நீர் நிரம்பியுள்ளது பல முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

மாணவனை தாக்கிய பஸ் நடத்துனர் கைது

பஸ் நடத்துனரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பஸ் நடத்துரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை கினிகம பகுதி பாடசாலையொன்றில் ஆண்டு 11 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் ஒருவனே தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் பண்டாரவளை பிராந்திய இ.போ.ச.டிப்போ பஸ் நடத்துனர் ஒருவரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பஸ்சில் பாடசாலைக்குச் செல்வதற்காக ஏறிய இம்மாணவன் பஸ்சில் செல்வதற்கான (பாஸ்)…

Read More

சூடு வைக்கப்பட்ட சிறுமி உறவினர்களிடம் ஒப்படைப்பு

-எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி,  இரண்டு மாத சிகிச்சையின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து சிறுமியின் தாயின் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார். கடந்த 11.3.2015 அன்று குறித்த சிறுமி வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 13.3.2015 அன்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். தொடர்ந்து இரண்டு மாதங்கள் மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை சிகிச்சையின் பின்னர்…

Read More

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று வகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். குருணாகலை வெல்லவ மத்திய மகா வித்தியாலத்தியத்தின் புதிய இரு மாடி கட்டிடம் மற்றும் கணினிக்கூடம் திறப்புவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று அவசியம் என்பது தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனைக்கமைய வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தவிர கல்வி மேம்பாட்டுக்காக எதிர்காலத்தில் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஆயிரம்…

Read More

உயர்தரப் பரீட்சையை ஏப்ரலுக்கு மாற்றுவது குறித்து பேச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். தற்பொழுது நடைமுறையில் உள்ளவாறு ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக புதிய மாணவர்கள் சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் காத்திருக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில் குறித்த பரீட்சையை நடாத்தினால்…

Read More

டிக்கெட் இன்றிப் பயணித்தால், ரூ.3,000 தண்டம்

– வி.நிரோஷினி – ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தால், 3ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும். அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரயில்களில் பயணஞ் செய்யும்  பயணிகளின் பயணச்சீட்டுகளுக்காக, சலுகை அடிப்படையிலான கட்டணங்கள் அறவிடப்படினும், அவர்கள் அதனையும் செலுத்தத் தவறுகின்றனர். இன்னுஞ்சிலர், தாம் பயணிக்கும் வகுப்புகளை விடவும், கட்டணங்கள் கூடிய…

Read More

பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலி கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஏனைய நாட்டைச் சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய நாட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட் திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் ஜெனிவாவிற்கு செல்ல இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின், ரமழான் மலிவு விற்பனை

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்யும் “ரமழான் மலிவு கஸானா சந்தை 2016”  இம்மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30மணி முதல் மாலை 5.00மணி வரை  தெஹிவலை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் வொன் ஸெய்திஅப்துல்லாஹ்வும் அன்னாரின் பாரியாரும் பிரதம அதிதியாக…

Read More

கழிவுகளை புத்தளத்தில் கொட்டும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்- அமைச்சர் றிஷாத்

கொழும்பு நகர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று அங்கு கொட்டப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, காலாகாலமாக இந்தக் குப்பைகள் கொழும்பின் மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் கொட்டப்பட்டு வருவதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் கண் கூடாக காண்கின்றோம். மீத்தோட்டமுல்ல பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப்பிரதேச மக்கள் படுகின்ற அசௌகரியங்களும் அவஸ்தைகளும் சொல்ல முடியாதவை. அதற்கு மாற்றுத்தீர்வு ஒன்று…

Read More