Headlines

மீண்டும் டெங்கு அபாயம்

காலி மாவட்டத்திகுட்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்றும் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அக்மீமன, பத்தேகம, அம்பலாங்கொட மற்றும் அமதுவ ஆகிய பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தொற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…

Read More

உயிருடன் பிடிக்கப்பட்ட மரை

பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உயிருடன் மரை ஒன்றை  தோட்ட பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து பிடித்துள்ளனர்.  உணவு தேடிவந்த குறித்த மரையின் கால் ஒன்று உபாதைக்குள்ளாகியிருந்த நிலையிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மரை தற்போது நல்லதன்னி வனலிலங்கு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More

காற்று மாசடைதலில் கண்டி முதலிடம் – ஜனாதிபதி

கொழும்பு நகரத்தை தோல்வியடைய செய்து காற்று மாசடைதலில் கண்டி நகரம்  முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இலங்கையின் காற்று மாசடைதல் தொடர்பிலான ஆறாவது தேசிய மாநாடு நேற்று  (5) மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

Read More

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More

பாடசாலை மாணவர்கள், வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்;த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை…

Read More

களனி பல்­க­லை மாணவர்கள் ஐவர் கைது

நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­விக்கு பகிடிவதை செய்த அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரி­பத்­கொடை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். கிரி­பத்கொடை பொலிஸ் நிலை­யத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வான விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த ஐவ­ரையும் கைது செய்­த­தாக களனி பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னகோன் தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, தற்­போது…

Read More

சொகுசு பஸ் நடத்துனர்கள் பணி பகிஷ்கரிப்பு

காலி – கொழும்பு சொகுசு பஸ் நடத்துனர்கள் இன்று (6) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலி – கொழும்பு அதிவேக பாதையில் புதிய நான்கு பஸ்களை சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பஸ் நடத்துனர்கள் தெரிவித்துள்ளர்.

Read More

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 04ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று (6) மரணமடைந்துள்ளார். கட்டட நிர்மாணப் பணியின் போது மரங்கள் சரிந்தது வீழுந்தமையால் தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.

Read More

கொழும்பின் பல பிரதேசங்களிலும் நீர் வெட்டு

நுகேகொடை மற்றும் கோட்டே ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் நீர்வெட்டுஅமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எத்துல்கோட்டே, பிட்டகோட்டே, உடஹமுல்ல, நுகேகொடை, பாகொடை, ஹலெவல் வீதியின் நுகேகொடை சந்தியிலிந்து விஜேராம சந்தி வரையான பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாவலை வீதியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் உட்பட இதனை அண்மித்த அனைத்து பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10…

Read More

பேராதனை – கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்

பேராதனை மற்றும் கண்டி நகருக்கு இடையில் ரயில் பஸ் சேவையை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

Read More

கொழும்பில் எலித் தொல்லை அதிகரிப்பு!

தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு எலிகளை அழிப்பதற்கான மருந்த வகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50000 வீடுகளுக்கு இந்த மாதத்தில் இந்த வகை மருந்துகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதி வேகமாக பரவி…

Read More