Headlines

ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே…

Read More

பல பிரதேசங்களில் மின்சாரம் தடை

தென் மற்றும் சப்ரகமுவ மாகணங்களில் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக   இலங்கை மின்சார சபை தெரிவித்தது. குறித்த மின் தடையானது  சுமார் 40 நிமிடங்கள்  நீடித்துள்ளது. லக்ஷபான  மின் விநியோக பாதையில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமை  நிலைக்கு திரும்பியுள்ளது.

Read More

ஹப்புத்தளையில் அதிசக்திவாய்ந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த பொதியொன்று தொடர்பில், பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார்,  பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது குறித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்து, அவரின் உத்தரவுக்கமைய குண்டுகள் செயலிழக்கும்…

Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார். இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று (13) பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

Read More

வாடகை முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு கால அவகாசம்!

மேல் மாகாணத்தில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தையும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக வாடகை முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நுவன் வணிகரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்படும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான அடையாள அட்டைகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த மாவட்டத்திற்கான முச்சக்கரவண்டி என அடையாளப்படுத்துவதற்கான ஸ்ரிக்கர்களும்…

Read More

கொழும்பில் மாணவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்

தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

Read More

பொலிஸ் மா அதிபர் ஏற்பாடு செய்துள்ள இப்தார்

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி, பொலிஸ் திணைக்களத்தில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள்

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் தேயிலை,தென்னை மற்றும் இறப்பர் பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டயருக்கு குறைவானளவில் தேயிவை,தென்னை, இறப்பரினை பயிரிடும் பயிர்ச் செய்கையாளர்களுக்கே 8 இலட்சம் மானியத் தொகை வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த உற்பத்தியாளர்களுக்கு 8 இலட்சம் மானிய தொகையானது ஒருவருடத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டமானது காலி மாவட்டத்தில் சிறிய நில உரிமையாளர்கள் 600பேருக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

நிதியமைச்சரின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர , இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமொன்றினை அளிக்க சமூகமளித்துள்ளார்.

Read More

கொழும்பு – அவிசாவளை வீதிக்கு மீண்டும் பூட்டு

கொழும்பு – அவிசாவளை வீதி, சாலாவ இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சேதமான பொருட்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Read More

அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்

அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் இன்று திறக்க  அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சலாவ இராணுவ முகாமில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து சீதாவக்க கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.

Read More

குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீவிபத்து சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம்இடம்பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்தது தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத்தீயினால் பல வார்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநோயாளர் பிரிவு எரிந்துள்ளதால் நோயாளிகளுக்கு தேவையானசிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குருநாகல்வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சந்தன கந்தன்கம…

Read More