Headlines

ரவிகருணாநாயக்கவின் இப்தார் நிகழ்வு (Photo)

– அஷ்ரப் ஏ சமத் – நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று (21ஆம் திகதி) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு  நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். இதில் கொழும்பு வாழ் 1000 பேர்  இராப்போசன வைபத்திலும் கலந்து சிறப்பித்தனா்.

Read More

21 பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தின் 21 பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இடங்களாக மண்சரிதவியல் தேசியகட்டிடவியல் ஆய்வகம் பிரகடனப்படுத்தியுள்ளது.

Read More

தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில்

கொழும்பு – புத்தளம் வீதியில் நீர்கொழும்பு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று இன்று காலையில் தண்டவாளத்தை விட்டு விலகியதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு ஓ.ஜ.சி கைது

– அஷ்ரப் ஏ சமத் – கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்ணிடம் லஞ்சம் பெற்றதற்காக இன்று  (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா். பொறுப்பதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிராக பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக 1 இலட்சம் ருபா பேரம் பேசி உள்ளாா். அதில் முற்பணத்தினை தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்ணிடம் 20ஆயிரம் பெறும்போதே விசேட பொலிஸ் கைது செய்தனா். இவர் கொழும்பு மஜிஸ்திரேட்…

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல்

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

குடியிருப்பாளர்களுக்கான புதிய வீடுகளுக்கான அடிக்கல்!

அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்தில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பொருட்டு வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டும் வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. இவ் அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நாட்டி வைத்தார். இவ் வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், ஆர். ராஜாராம், என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

தம்மாலோக்க தேரருக்கு பிணை

உடுவே தம்மாலோக்க தேரரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக பராமரித்து வந்தமை தொடர்பில் தேரர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிவாரணம் வழங்குதலை முறைமைப்படுத்த ஜனாதிபதியினால் விசேட குழு!

கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைமைப்படுத்துவதற்கான ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயன்த, ஆகியோரின் தலைமையில் இக்குழுவை நியமிப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழு ஒருங்கிணைப்புச் செய்வதற்கும்…

Read More

தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவு

இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (16) நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், எஸ்.எம். ரஞ்சித்

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார். அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்: கால எல்லை நீடிப்பு

மண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்புச் சம்பவம் ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கான காலத்தை இரண்டு மாதங்களாக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வாகனங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களும் தமது தவணைக் கட்டணங்களை இரண்டு மாதங்கள் காலம் தாமதமாகி செலுத்தலாம். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமது மின்சார மற்றும் தண்ணீர்…

Read More