Headlines

சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு

மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரெட்டொன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  போதே விசேட விடயங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 200 குளங்கள் : நீர்பாசன அமைச்சர்

ஊவா, வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 200 குளங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நவோதய திட்டத்தின் கீழ் இந்தக் குளங்கள் அமைக்கும் பணியானது நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மொனராகல பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

அரநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுவரும்அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அமைச்சர்களின் வாகனங்கள் திரும்பிச் செல்ல முடியாதவாறு சிலர் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடம் அலவி மெளலானா – அமீர் அலி

-அபூ செய்னப் – மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா அவர்களது மரணச்செய்தியானது மிகுந்த கவலையையும்,மன வேதனையையும் உண்டு பண்ணியுள்ளது. அவர் நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடமாகும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன். அவரது இழப்பு இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு பேரிழப்பாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அஷ்ஷெய்க் அலவி மெளலானா அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதும் பிரதியமைச்சர் வழங்கிய இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையின் மூத்த…

Read More

சிறைச்சாலையிலும் பகிடிவதைகள்

பாடசாலை, பல்கலைக்கழகங்கள் என்ற நிலை மாறி தற்போது சிறைச்சாலைகளிலும் பகிடிவதைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகிடிவதைகளுக்கு முகம் கொடுத்திருப்பது வெலிகட மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாகி சென்றுள்ள சிறைச்சாலை காவலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காவலர்கள் தமது விடுதிகளில் தங்கியிருந்த போது கடந்த சில நாட்களுக்கு முதல் நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் சிறைச்சாலையில் உள்ள சிலரால் இவர்கள் பகிடிவதைக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இவர்கள் தாக்குதல் சம்பவத்திற்கும் முகங்கொடுத்துள்ளதாகவும், இந்த பகிடிவதையினைத் தாங்கிக்…

Read More

பாடசாலை மாணவர்கள் இருவரைக் காணவில்லை

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் (14) முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தரம்-9 மற்றும், தரம்-8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு திரும்பாததனால் இவர்களை பெற்றோர் தேடியுள்ளதுடன் இறுதியில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்சமயம் குறித்த மாணவர்களை தேடும் பணியில் பொலிஸார்…

Read More

ஜோர்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 16.19 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக ஜோர்தான் பிரஜையான அமர் யூசுப் அல் சுதே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு பலாமரச் சந்தியில் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது…

Read More

பள்ளிவாசல் மீது கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை

பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண…

Read More

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்!

போதை பொருளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு புனருத்தாபன வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வான கருத்தரங்குகள், விழிப்பூட்டக்கூடிய நிகழ்வுகள் போன்றவற்றையும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .பி.மொயிதீன் தெரிவித்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு திங்கட்கிழமை (13) மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள்…

Read More

கொஸ்கம மீள்கட்டுமானப் பணிகள் முன்னேற்றகரமான நிலையில்

கொஸ்கம சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் வகையில் இரவு பகலாக திருத்த வேலைகள், மறுசீரமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல வீடுகளின் மீள்கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும், இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு பொரளுகொட விகாரையில் தங்கவைக்கப்பட்டிருந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் நேற்று முந்தினம்(13) காலை தமது வீடுகளுக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடற்படை வீரர்கள் மற்றும்…

Read More

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை இரத்தானது,  கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று (15) தொழிற்சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பஸ் சாரதிகளுக்கான விஷேட அனுமதிப் பத்திரம் அடுத்த மாதம் முதல் கட்டாயம்

மக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு வழங்கப்படும் விஷேட அனுமதிப் பத்திரத்தை அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read More