Headlines

மருத்துவர்கள் சிவப்பு அறிக்கை விடுப்பு : நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.!

நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இதன் முதற்கட்டமாக நாளை அம்பாறை வைத்தியசாலையின் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயளாலர் வைத்தியர் நாலின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அனைத்து மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்…

Read More

மஹியங்கனையில் நிலைமை சுமுகம்

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர். மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள பன்­ச­லையில்  கடந்த நோன்­மதி தினத்­தன்று பெளத்த தேரர்  ஒருவர்  நிகழ்த்­திய  மார்க்க பிர­சங்­கத்தில் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாக  தெரி­விக்­கப்­பட்­ட­மை­யை­ய­டுத்து அதற்கு  எதிர்ப்பு  தெரி­வித்து முஸ்லிம் இளை­ஞர்கள் பெளத்த  கொடி­களை  எரித்­ததாலேயே இந்த  முறுகல் நிலை உரு­வா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்­சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­தாக  சந்­தே­கத்தின் பேரில் எட்டு  இளை­ஞர்கள் 14 நாட்கள்…

Read More

பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படும்

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார். நேற்று (25) பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Read More

இன்னுமொரு பள்ளி அமைக்கப்பட்டால் முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பவன் நானே – வஜிர தேரர்

-சுஐப் எம்.காசிம் – கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று அபன்வள ஞானலோக ஹிமி, கொலொன்னாவ வஜிர ஹிமி ஆகியோர் இன்று தெரிவித்தனர். கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25/05/2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். பள்ளி சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்ற, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், உலமாக் காங்கிரசின்…

Read More

சுஜித் மற்றும் புபுதுஜாகொட கைது

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

அநுராதபுரம் திசா வாவியில் குளிப்பதற்கு தடை!

அநுராதபுரத்திலுள்ள திசா வாவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த வாவியில் பொதுமக்கள் குளிப்பதால் நீரானது அசுத்தமடைவதாக திசா வாவியை பாதுகாக்கும் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நன்றாக ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக டீ.பீ.ஜி.குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த அறிவிப்பினால் வாவியை அண்மித்து வசிப்போர் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனினும் அவர்களுக்கு மாற்று திட்டம் ஒன்று ஏற்படுத்திக்…

Read More

கொலன்னாவை மஸ்ஜிதுல் சம்மேளன தலைவரின் அவசர வேண்டுகோள்!

-சுஐப் எம் காசிம் – வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொலன்னாவைப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்காண மக்கள் அகதிகள் முகாம்களிலும் பாடசாலைகளிலும், பன்சலையிலும் தனியார் வீடுகளிலும் தங்கியிருந்து மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்கின்றனர். உடுத்த உடையைத் தவிர எதையுமே கொண்டுவராத இந்த மக்களுக்கு கடந்த திங்கட்கிழமையிலிருந்து 27 பள்ளவாசல்களை நிர்வகிக்கும் கொலன்னாவை பள்ளி சம்மேளனம் இறைவன் உதவியால் முடிந்தவரையில் உதவி வருகின்றது. முதலாம் நாள் 3000 சாப்பாட்டுப் பார்சல்களை தயாரித்து வழங்கும் வேளைகளை தொடங்கிய நாம் உன்று நாள…

Read More

மழை நீடித்தால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கும்!

மழை நீடித்தால் மண்சரிவு அபாயமும் அதிகரிக்கும் என தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மழை தொடர்ந்தும் பெய்தால் நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கண்டி, இரத்தினபுரி, கருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு…

Read More

வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது? – சட்டத்தரணிகள்

பாரிய போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வெலோ சுதாவிற்கு எதிரான வழக்கு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக 17 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களை குவித்ததாகவும், இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது….

Read More

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசு புலமைப்பரிசில்!

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் சென்று இலவசமாக படிப்பதற்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் 2016ஆம் ஆண்டுக்காக கோரப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கொழும்பிலுள்ள தனது உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் இந்தப் புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் புலமைப் பரிசிலைப் பெற்று…

Read More

பாதிக்கப்பட்ட மக்களிக் கண்ணீர் துடைக்க புறப்படுவோம்…

– ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம் –  உலக வாழ்வில் பல விதமான இன்னல்களையும், மகிழ்சிகளையும் இறைவன் எமக்கு வழங்கி அதில் பல விதமான படிப்பிணைகளையும்,சோதனைகளையும் ஏற்படுத்தி எமது உள்ளங்களின் ஈமானிய தரத்தினை மதிப்Pடு செய்து பல முடிவில்லா வெகுமதிகளை வழங்குவதற்காகத்தான் நாளாந்தம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தி மனித புனிதர்களின் ஈமானிய வலுவினை இறைவன் வென்றெடுக்கிறான். இந்தவகையில் அன்மையில் எமது இலங்கைத் தாயகத்தின் தலைநகரின் சில பகுதிகள் உற்பட பல பிரதேசங்களிலும் வெள்ளம்,மண் சரிவு…

Read More

ஆறுகளில் நீர் மட்டங்கள் சாதாரண நிலையில்

கடந்த 24 மணி நேரத்திற்குள், அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆறுகளில் நீர் வழமைபோன்று மாற்றமடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது. மலைநாட்டுப் பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் பெரும்பாலும் குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் நீர்ப்பாசன இயக்குனர் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார். எவ்வாறாயினும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநிலை தொடர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், வான்கதவுகள் திறக்கப்படுவதை தவிர்த்து இருப்பதாகவும் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார்.

Read More